உடலில் கற்பாறையைக் கட்டிக் கொண்டு மனைவியின் தலையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்த கணவன் ஆஸ்திரியாவில் பரபரப்புச் சம்பவம்

மனை­வியைப் படு­கொலை செய்து அவ­ரது தலையைத் துண்­டித்த பின்னர் மனை­வியின் தலை­யுடன் ஏரியில் மூழ்கி கணவர் ஒருவர் தற்­கொலை செய்துகொண்ட பர­ப­ரப்பு சம்­பவம் ஆஸ்­தி­ரி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சல்ஸ்பேர்க் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சுமார் 50 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள கமுன்டன் நக­ரி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

showImageInStoryமேற்­படி கணவர் தனது மனை­வியை படு­கொலை செய்து அவ­ரது உடலைத் துண்­டு­க­ளாக வெட்டி இரு ஆடைப் பெட்­டி­களில் திணித்த பின்னர் ஏரியில் அந்த இரு ஆடைப்­பெட்­டி­களை வீசி விட்டு தனது உடலில் கற்­பா­றையைக் கட்டிக்கொண்டு மனை­வியின் துண்­டிக்­கப்­பட்ட தலை­யுடன் ஏரி­யினுள் குதித்­துள்­ள­தாக நம்பப்­ப­டு­கி­றது.

மேற்­படி உடல் பாகங்­களைக் கொண்ட ஆடைப் பெட்­டி­களில் முத­லா­வது பெட்டி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீட்கப்படடது.

showImageInStoryஇத­னை­ய­டுத்து மேற்­கொண்ட தேடு­தலின் போது இரண்­டா­வது ஆடைப் பெட்டி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து ஏரியின் அடியில் அந்த நப­ரது சட­லமும் பெண்ணின் தலையும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. கொல்­லப்­பட்ட பெண் 50 வய­துக்கும் 70 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டை­யவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ் திரிய பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply