சூரிய குளியலில் (சன் பாத்) ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


பூங்காவொன்றில் சன் பாத்தில் ஈடுபடும் அந்த யுவதி பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு தலையை முன்புறமாக திருப்பும்போது அவரை நோக்கி பாம்பொன்று விரைந்து வருவதாகவும், அதையடுத்து,

அந்த யுவதி திடுக்கிட்ட போதிலும் அவர் தனது கையால் பாம்பின் கழுத்தை பிடித்து அதனை தூக்கி எறிவதாகவும் அவ்வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.

தென் ஆபிரிக்காவின் ரொபர்ட்ஸன் நகரிலுள்ள பூங்காவொன்றில் இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.


எனினும், இந்த வீடியோவை உன்னிப்பாக அவதானித்த சிலர், மீன்பிடித் தூண்டிலொன்றின் நிழல் தென்படுவதை கண்டறிந்துள்ளனர். “ இது போலியான காட்சி. பாம்புகள் நேர்கோட்டில் நகர்வதில்லை” என ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது வேடிக்கைக்காக பதிவுசெய்யப்பட் காட்சி என இவ்வீடியோவை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.

“எனது சகோதரனும் நானும் இணைந்து எமது சகோதரியை வேடிக்கையாக பயந்து ஓட செய்வதற்கு முயற்சித்தோம்.

ஆனால், அவர் தயாரானவராக இருந்தார். நான் சிறு பருவத்திலிருந்து ஆற்றில் பாம்பைகளை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். சிலவேளை பாம்பு பிடிப்பதில் எனது சகோதரியும் என்னுடன் இணைந்துகொண்டிருந்தார்” என அந்நபர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply