இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் ‘பாக்சி்ங் டே’ டெஸ்ட் டிசம்பர் 26-ந் திகதி தொடங்கியது.
இந்த போட்டி முடிந்த இரண்டு நாட்கள் இடைவெளியில் ஜனவரி 2-ந் திகதி புத்தாண்டு டெஸ்ட் தொடங்கியது. இரு போட்டிகளுக்கும் இடையில் ஓய்வு நாள் குறைவாக இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் பெண் தோழிகளுடன் வெளியில் செல்லவில்லை.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் நேற்று முடிந்தது. அதன்பின் 3-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 14-ந் திகதி தொடங்குகிறது.
இதற்கிடையில் சுமார் 8 நாட்கள் இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது பெண் தோழிகளுடன் உல்லாசமாக பொழுதை கழிக்க முடிவு செய்துள்ளது.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஸ்டீவன் பின் தங்களது பெண் தோழிகளுடன் விமானத்தில் பறந்து பொழுதை கழித்துள்ளனர்.
பிராட்டின் நீண்ட கால பெண் தோழியாக பீலே மிட்செல் இருந்து வருகிறார். இவர் ஆஷஸ் தொடரின் வெற்றியின்போதும், இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்ற போதும் பிராட்டுடன் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.
இவர் இன்று தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பிராட்டின் தோழி பீலே மிட்செல், ஸ்டீவன் பின்னியின் பெண் தோழிகள் ரோஸ் ஹால் மற்றும் லாரேன் பிரேஷா ஆகியோர் உள்ளனர். அவர்களடன் பின் உள்ளார்.
இந்த படத்தை வெளியிட்டு இந்த விமானத்திற்கான என்னுடைய பயணிகள் என்று பிராட் செய்தி வெளியிட்டுள்ளார்.