கத்தியுடன் அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் மீது பாரிஸ் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச் சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் துப்பாக்கிக் குண்டுபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கையில்,

shotகையில் கத்தியுடன் உடலில் குண்டு பொருத்தப்பட்ட பட்டியுன் நபரொருவர் அல்லாஹு அக்பர் என்று கத்தியவாறு பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

இதை அவதானித்த பாரிஸ் பொலிஸார் உடனடியாக குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

anti-terrorismசம்பவத்தில் துப்பாக்கிக் குண்டு பட்டதையடுத்து குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொல்லப்பட்ட நபர் அணிந்திருந்த குண்டு பொருத்தப்பட்ட அங்கி போலியானதெனவும் அவரிடம் எவ்வித ஆள் அடையாள அட்டைகளும் இருக்கவில்லை என பாரிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply