பிரேசிலின் சுற்றுலாத்தலமான ரியோ டி ஜெனிரோவில் வரும் சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிட்டு தப்பும் கும்பலால் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சிறுவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

rio_street_criminals_002சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து கழுத்துச்சங்கிலிகள், கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையிடும் நோக்கில் அவர்களை இந்த கொள்ளை கும்பல் பட்டப்பகலில் தாக்குவதாக கூறப்படுகிறது.

rio_street_criminals_003பயணிகளை தாக்கி கொள்ளையிடுவதை அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் தமது கமெராவில் ரகசியமாக பதிவு செய்துள்ளார்.

rio_street_criminals_003கொள்ளையிடும் கும்பலில் இருக்கும் இளைஞர்கள் விலை உயர்ந்த பொருட்களை எப்படி நோட்டமிட்டு பறிக்க வேண்டும் என இளையவர்களுக்கு விளக்கமளிக்கின்றனர்.

rio_street_criminals_006இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த ரியோ நகரின் மேயர், நகரில் பல பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார்.

மேலும், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் 8 மாதத்தில் பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply