பெங்களூருவை சேர்ந்த 92 வயது முதியவர் ஒருவர் பரதநாட்டியத்தில் அசத்திய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பானுமதி ராவ்.
92 வயது முதியவரான இவரது பரத நாட்டிய நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
குழந்தை கிருஷ்ணனிடம் ஒரு தாய் பேசுவதை, தன் நடனத்தில் அழகாகவும் அற்புதமாகவும் வெளிப்படுத்தினார் பானுமதி. அவரது இந்த நடனம் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நடன நிகழ்ச்சியை, பானுமதியின் மகள் மாயான் கிருஷ்ணா என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ காட்சியை, இதுவரை ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அழகிய திருமணம்
பாகுபாலி படத்தில் காட்டெருமையை அடக்கும் காட்சி உருவான விதம்