ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறையை பிரயோகித்த புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Cologne நகர ரயில் நிலையத்தில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் புத்தாண்டை கொண்டாட கூடியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்குள் புகுந்த சுமார் 1,000 பேர் அடங்கிய கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பெண்கள் மீது பாலியல் வன்முறையை பிரயோகித்துள்ளனர்.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட 170 பெண்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர். சில பெண்கள் நல அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.
பாலியல் வன்முறையை பிரயோகித்த நபர்களை பிடிக்க பொலிசார் தனிப்படையை உருவாக்கி தேடுதல் வேட்டையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்தேகப்படும் 31 நபர்களை பொலிசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இவர்களில் 18 பேர் புலம்யெர்ந்தவர்கள்.
அல்ஜீரியா(9), மோரோக்கோ(8), சிரியா(4), ஈரான்(5), ஜேர்மன்(2), ஈராக்(1), செர்பியா(1) மற்றும் அமெரிக்கா(1) ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும், இவர்களில் 2 பேரை மட்டுமே பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் சில பேரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் புத்தாண்டு தினத்தன்று பெண்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டதாக பொலிசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.