பிரகாஷ், நந்தினி… தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான்.
சம்மதித்தாள்.
திருமணம் ஆனது. 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்குள் சிறு சச்சரவு கூட வந்ததில்லை. திடீரென நந்தினிக்கு கணவன் மீது சந்தேகம். காரணம்..? வீட்டுக்கு வந்தால் அவள் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல சுற்றுபவன், இப்போது கண்டுகொள்வதே இல்லையே.
முன்பு படுக்கையறைக்கு வந்தாலே பிரகாஷின் தொந்தரவு தாங்க முடியாது. தினமும் உறவு கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பான்.
இப்போது சில மாதங்களாக தொடுவது கூட இல்லை. நந்தினிக்கே மூடு வந்து கூப்பிட்டாலும் கூட, அவன் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒருவேளை கணவனுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என எண்ணி வருந்தினாள். உண்மையில், பிரகாஷுக்கு நந்தினி நினைத்தது போல எந்தப் பெண் தொடர்பும் இருக்கவில்லை.
அவனுக்கு செக்ஸ் மீது உள்ள ஆர்வம் முழுமையாக வற்றிவிட்டிருந்தது.
எதனால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது?
மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும்.
இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம்.
தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும்.
மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது?
முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.
சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை.
மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது!
(தயக்கம் களைவோம்!)
டாக்டர் டி.நாராயண ரெட்டி
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான மழை.
– சேவியர்