ஐந்து பிள்ளைகளுக்கு தாய் ஒருவர் தனது கள்ளக் காதலனுடன் இணைந்து தனது சொந்தக் கணவனை கொலைசெய்த அதிர்ச்சிகர சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மண்வெட்டியால் தாக்கியே இக்கொலையை புரிந்துள்ளார். அதிகமான மதுவை அருந்தக் கொடுத்து பின்னர் இக்கொலையை அவர் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவனைப் படுகொலை செய்த மனைவியும் அவரது கள்ளக் காதலனும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது.
தனது பிள்ளைகளை, கணவனையும் கைவிட்டுவிட்டு இளம் வயது கள்ளக் காதலனுடன் சென்று தனியாக வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன் மனைவியும் அவளது காதலனும் நகரில் நிற்பதை அவதானித்து அவர்களிடம் சென்று கணவன் அறிவுரைகூறி பிரச்சினைகளை கூறியுள்ளார்.
அவர்கள் இவரை சாதுரியமாகப் பேசி வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தச் செய்து மண்வெட்டியால் வெட்டியும் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
பொலிஸார் இவர்களை கைதுசெய்து நாவலப்பிட்டி பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிவான் இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.