தேசிய தைப்பொங்கல் விழா இன்று (15) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, இன்று காலை, யாழ்ப்பாணம் – பலாலி, ஶ்ரீ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட தைப்பொங்கல் பூஜைகள் மற்றும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருமதி மைத்திரி விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.
மத வழிபாடுகளை அடுத்து, யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் ஹிந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் , இராஜாங்க சிறுவர் விவகார அமைச்சரும் யாழ் மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.