காதலனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கண்டி  போகம்பர குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று பகல் கண்டி குயின்ஸ் உணவகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குறித்த பெண் குதித்துள்ளார்.

உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட பெண் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

காவற்துறையினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இப்பெண் பதுளை பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் மோதுண்டு இராணுவ வீரர் பலி

15-01-2016

army-soldier-anaiyiravu_bodyயாழ். ஆனையிறவு பிரதேசத்தில் ரயிலில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டே குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உள்ள படைப்பிரிவில்  கடமையாற்றும் புத்தளம் ஆனமடுவ பகுதியை சேர்ந்த மா. நந்தசூரிய (42) என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கிக்கப்படுகிறது.
குறித்த சடலம் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, இதுதொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share.
Leave A Reply