குழந்தை பிர­ச­வத்­துக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனது மனை­விக்கு உதவி செய்­வ­தற்­காக தனது காத­லியை அழைத்துக் கொண்டு சென்ற கண­வ­ரையும் அவரால் அழைத்து வரப்­பட்ட அவ­ரது காத­லி­யையும் வைத்தியசாலை வள­வினுள் வைத்து சட்­ட­பூர்வ மனை­வியின் சகோ­த­ரர்கள் தாக்­கிய சம்­பவம் சிலாபம் பொலிஸ் பிரி­வினுள் இடம்­பெற்­றுள்­ளது.

பிங்­கி­ரிய பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அவ­ரது சட்­ட­பூர்வ மனை­வியின் இரண்­டா­வது பிர­ச­வத்­துக்­காக மனை­வியை சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்ளார்.

தனது கணவர் வேறு ஒரு பெண்­ணுடன் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பது தொடர்பில் மனை­விக்கு தெரி­ய­வந்­தி­ருந்­துள்­ளது.

இந்­நி­லையில் பிர­ச­வத்­திற்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட மனை­விக்கு சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வைத்­தி­ய­வர்கள் தெரி­வித்­துள்­ள­தோடு மனை­விக்கு உத­விக்­காக ஒரு பெண்ணை அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும் என கண­வ­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் போது தனக்குத் தெரிந்த ஒரு பெண் இருப்­ப­தா­கவும் அவளை அழைத்துக் கொண்டு வர முடியும் என மனைவியிடம் தெரி­வித்து கணவர், அப்­பெண்ணை அழைத்துக் கொண்டு வரச் சென்­றுள்ளார்.

தனது கணவர் அழைத்து வர­வி­ருப்­பது அவ­ரது காத­லியே என யூகித்துக் கொண்ட மனைவி இது பற்றி தனது உறவினர்களுக்குத் தெரி­வித்­துள்ளார்.

இதனால் அவ­தா­னத்­துடன் இருந்­துள்ள உற­வி­னர்கள் தனது காத­லி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்கு வந்த கண­வரை நிறுத்தி அவ­ரது காத­லியை விசா­ரித்­துள்­ளனர்.

இதனால் அச்­ச­ம­டைந்த அப்பெண் தான் இந்த நப­ருடன் தொடர்பை பேணி வரு­வ­தா­கவும் இவ­ருடன் வாழவே விரும்புவதா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இதனால் கோப­ம­டைந்த சட்­ட­பூர்வ மனை­வியின் சகோ­தர சகோ­த­ரிகள் அவ்­வி­ரு­வ­ரையும் தாக்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் அவ்­வ­ழி­யாகச் சென்று கொண்­டி­ருந்த சிலாபம் பொலிஸ் நிலைய பொலிஸார் இச்­சம்­ப­வத்தை அவ­தா­னித்து அவர்­களை சிலாபம் பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து குறித்த யுவதி தனக்கு இந்நபர் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்தப் பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்து பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.

Share.
Leave A Reply