பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில், மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் வழிபாட்டில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
இவ்வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களான TMVP கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் மற்றும் அக்கட்சியின் உறுப்பினரான கஜன் மாமா, கலீல் எனப்படும் புலனாய்வுத்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு ஜனவரி 27 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், சிறைச்சாலை பாதுகாப்புடன் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 11ம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply