“வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பக்கத்தில் இருந்து பார்க்கனும், நிலாவிற்கு சென்று பூமியை பார்க்கணும் மொத்தத்தில் இந்த உலகத்தை ஆளவேண்டும்” தாவூத் துபாயில் சொகுசு வாழ்க்கைக்கு அடியெடுத்த பொழுது, உச்ச கட்ட மகிழ்ச்சி பெருக்கில் இருந்த பொழுது உணர்ச்சியில் சோட்டா ராஜனிடம் உதிர்த்த வார்த்தைகள் இது.

தாவூத் தனது சிறு வயதில் எதிகால வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்க நினைத்தானோ அப்படியே அவனது வாழ்க்கை அமைந்து இருக்கிறது.

மும்பையின் மிகப்பெரிய டானாக வலம் வர ஆரம்பித்த தாவூத் குறித்து அவனது தந்தை இப்ராஹீம் கஸ்கர் “மும்பையின் தெருக்களில் ஆரம்பித்த அவனது வாழ்க்கை, எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறமோ என்பது கூட தெரியாமல் அவனது எண்ணம் போன போக்கில் அவனது செயல்கள் இருந்தது.

அவனது செயல்கள் அனைத்தும் அவனது மனதுதான் தீர்மானித்தது.நல்லது கெட்டது என்று பகுத்துபார்க்கும் நேரத்திற்குள் அவன் வேறு ஒரு இடத்திற்கு போய்விட்டான்.

இனி தாவூத் எனது மகன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு மனது இடம் கொடுக்கவில்லை” தாவூத் குறித்து அவனது தந்தை சக போலீஸ்காரர்களுடன் பேசிய வார்த்தைகள் இவை. அவர் சொன்னதுபோல இன்று தாவூத் யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறான்.

dawood 1தாவூத் ஒரு முறை அவனது கூட்டாளிகளுடன் விருந்து ஒன்றில் உலகத்தின் மிக அதிகாரமிக்க இடம் எது? என்று கேட்ட பொழுது அவர்கள் பல்வேறு இடங்களை சொல்லி முடிவில் மிக பாதுகாப்பான இடமாக, அதிகாரங்கள் பொருந்திய இடமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சொன்னார்கள்.

உடனடியாக தாவூத் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குறித்த புளு பிரிண்ட்டை கேட்டான்.எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

சோட்டா ராஜனுக்கு தலை சுற்ற ஆரம்பித்து.தேன் கூட்டில் கையை வைக்க போகிறோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தாவூத் அந்த வெள்ளை மாளிகையை போல ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று சொன்னான்.

ஒரு சில மாற்றங்களை மட்டும் எடுத்து விட்டு கிட்ட தட்ட அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெண்கல பளிங்குகற்கள், நீல நிறத்தில் ஆன வரவேற்பு ஹால்கள் என்று வெள்ளை மாளிகையின் அம்சங்களை பார்த்தது பார்த்து செதுக்கினான் துபாயில்.

மும்பையில் இருந்த அவனது பங்களா கூட கிட்ட தட்ட வெள்ளை மாளிகை போலத்தான் இருந்தது.அதற்கு பிறகு தாவூத்தின் போக்கும் மாறியது.

dawood 18 logoஉலகத்தின் சர்வதிகாரி போல பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்களை செய்ய ஆரம்பித்தான்.

அப்படி செய்த ஒரு சம்பவம்தான் மும்பை குண்டு வெடிப்பு சம்பவமும்.அதன் பிறகு நடந்த ஒவ்வொரு உலகை மிரட்டிய பல்வேறு விரும்பதகாத சம்பவங்களின் மூல ஆணிவேரை தேடினால் அதில் இருக்கும் முக்கியமான வேர் தாவூத்தாக இருந்தான்.

அதனால் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் ஒரு குற்றவாளி நபராக மாறிப்போனது அவனது வாழ்க்கை.

dawood 2ஆனால் தாவூத்தின் வாழ்க்கை அப்படி இல்லை. அவனது வாழ்க்கை ஒரு சர்வமும் பொருந்திய ராஜாவை போல இருந்தது. மிகப்பெரிய பங்களா அதில் பெரிய நீச்சல்குளம், டென்னில் மைதானம்,ஸ்நூக்கர் ரூம், ஹைடெக் ஜிம், தங்கத்தால் வார்க்கப்பட்ட குளியல் அறை,

உலகத்திலே அதிக விலையுள்ள அனைத்து கம்பெனிகளின் கார்கள், கையில் படக் பிலிப்பி வாட்ச் (ஒரு மில்லியன் டாலர் மதிப்பு), அதிக மதிப்பிலான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் என்று எல்லாமே மிக மிக அதிகமான விலையுர்ந்த மதிப்புடையவைகளாக இருந்தது.

தாவூத்தின் இரவுகள் அழகான பெண்களால் நிறைந்து இருந்தது. உலகத்தின் பேரழகிகள் என்று நாம் தூரத்தில் இருந்து ரசித்து வந்த அழகிகள் தாவூத்தின் படுக்கைக்கு மஞ்சம் விரித்தார்கள்.

இந்த போதை அவனை மேலும் உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. நாளையடைவில் அழகிய பெண்களை விரும்பி கேட்க்கும் அளவிற்கு தாவூத்தை பெண் போதை தள்ளியது.

நாளையடைவில் தினசரி ஒரு பெண் என்கிற நிலைக்கு நிறுத்தியது. தாவூத்தின் ஆட்களில் இதற்காக உலகம் முழுவதும் பல்வேறு ஆட்களை பிடித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் தாவூத்தே போதும் என்று நிறுத்தும் அளவிற்கு வந்து விட்டது. ஆனாலும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல ஆசைகள் வெட்கம் அறியாமல் தாவூத்திற்கு அப்போ அப்போ வந்து வந்து போனது.

பெரும்பாலான இரவுகளில் தாவூத் முழித்தே இருப்பான். அதனால் பகல் பொழுதுகளில் நண்பகல் வரை தூங்கி எழுவது வழக்கம்.

அப்படி எழும் தாவூத் நீச்சல் குளத்தில் குளித்து விட்டு,மதிய உணவு இடைவெளியில் காலை உணவை முடித்து விட்டு, அவனது ‘டி’கம்பெனி ஆட்களை சந்திப்பது வழக்கம்.

அதன் பிறகு அவனது மூடை பொருத்து கிரிகெட் விளையாடுவது, ஸ்நூக்கர் விளையாடுவது என்று மாலை வரை அவனது பொழுதுகள் நகர்ந்து செல்லும்.இந்த இடையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போனில் பேசுவது,நண்பர்களுக்கு பேசுவது என்று அவனது பகல் பொழுதுகள் கழியும்.

dawood 9 600 3(1)மாலை நேரத்தில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வது தாவூத்தின் வழக்கம். கராச்சியில் இருக்கும் பல்வேறு இடங்களில் அவனக்கு பங்களாக்கள் இருக்கிறது.

அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வது வழக்கம் .தவிர கிளிப்டன் நகரில் கடற்கரையையொட்டிய இடங்களில் அடிக்கடி இது போன்ற பார்டிகளும் நடக்கும்.சில இரவுகள் தாவூத்திற்கு பிடித்த பென்ஸ்காரிலும்,பி.எம்.டபுல்யூ காரிலும் பாகிஸ்தான் மலைக்குன்றுகளில் செல்ப் டிரைவிங் நடக்கும்.

இது எப்போதாவது ஒரு முறைதான். தாவூத் அப்படி செல்ப் டிரைவிங் போனால், அந்த மலைக்குன்றுகள் முழுவதும் பாகிஸ்தான் அரசின் தீவிர கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

தாவூத்தின் காருக்கு மேலே கண்காணிப்பில் ஹெலிகாப்டர் வந்து கொண்டே இருக்கும்.இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில்தான் தாவூத்தின் ஒரு நாள் வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது.

60 வயதை கடந்த தாவூத், அவனுக்கு அடுத்த வாரிசை இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினான்.

அனைவரும் தாவூத் ஒய்வு பெற போவதாக நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் தாவூத் எனக்கு தேவை ஓய்வு இல்லை, கொஞ்சம் கூடுதலான நேரம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு வழக்கம் போல அவனது கண்காணிப்பில்தான் ‘டி’ கம்பனியை வைத்து இருக்கிறான்.

ஆனால் இப்பொழுது தாவூத்தின் நேரங்கள்,நடவடிக்கைகள் மாறி இருக்கிறது.

தாவூத்தின் வாழ்க்கை இன்று எப்படி கழிகிறது. பல ஆண்டுகளாக தாவூத் இரவுகளில் தூங்குவது இல்லை.அதே பழக்கம் இன்னமும் இருக்கிறது.

ஆனால் முன்பு போல சூரியன் வரும் வரை அவனால் விழிக்க முடியவில்லை. அதிகாலையில் அவனுக்கே தெரியாமல் அவனது கண்கள் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து விட்டது.

பகல் பொழுதுகளில் இஸ்லாமாபாத்,கராட்சியில் உள்ள சொத்துகளை பார்வையிடுவது, பாகிஸ்தானில் உள்ள சென்ட்ரல் வங்கி பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது தாவூத்தான் பெரும் தொகையை கொடுத்து அந்த வங்கியை தூக்கி நிலை நிறுந்தினான்.

dawood 19 600 2

இதுவரை அந்த வங்கி பக்கமே செல்லாத தாவூத் கடந்த இரண்டு வாரங்களில் வங்கி யின் தலைவர்களை ரகசிய இடத்தில் சந்தித்து இருக்கிறான்.

அதோடு பாகிஸ்தானில் இருக்கும் முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் இருவரை சந்தித்து பல்வேறு முக்கிய முடிவுகளை பேசி இருப்பதாக தெரிகிறது.இந்த ஏற்பாட்டை ‘ஜாவிட் மின்னட்’தான் செய்தது.அதோடு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து ரகசிய கூட்டங்கள் நடந்து இருக்கிறது.

தாவூத்திற்கு முன்பு போல உடல் நிலை இப்பொழுது இல்லையாம்.வயிற்றில் உணவு செரிமான குழாய் பிரச்சனை இருந்து அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறதுதாம்.

சிறு நீரக பிரச்சனை வேறு இருக்கிறதாம்.நண்பகலில் தாவூத்தின் மருத்துவர்கள் இருவர் மட்டும் தினசரி தாவூத் சொல்லும் இடத்திற்கு அழைத்து வரப்படுது,  அதன் பிறகு தொழுவது,பிறகு பாகிஸ்தானில் முக்கியமான அதிகாரிகளை சந்திப்பது என்று கடந்த இரண்டு வாரங்களில் தாவூத்தின் நேரங்கள் மாறி இருக்கிறது.

இரவு வேளைகளில் தாவூத்திற்கு பிடித்த மும்பையின் பழைய சினிமாக்களை பார்ப்பது,தேவை என்றால் பெண்கள், அவசியமாக அவனுக்கு பிடித்த ‘ரெட்லேபிள்’மதுவை குடிப்பது,அதன் பிறகு பாகிஸ்தானில் வழக்கம் போல இரவுகளை சுற்றுவது என்று கழிகிறதாம்.

தாவூத்தின் குடும்ப உறுப்பினர்கள்,பேரன் பேத்திகள் என்று அனைவரையும் வரவழைத்து நெடுநாட்களுக்கு பிறகு குடும்ப போட்டாவை எடுத்து இருக்கிறார்கள் தாவூத்தின் குடும்பத்தினர்.

தாவூத்தை சுற்றி இவ்வளவு சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்து கொண்டு இருந்தாலும்,தாவூத் குறித்து இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கும் பொழுதெல்லாம் பாகிஸ்தான் தாவூத் இங்கு இல்லை என்று சொல்லி வருகிறது.

அந்த நேரங்களில் தாவூத் எங்கு இருப்பான்?

கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்

– சண்.சரவணக்குமார்

Share.
Leave A Reply