கொலம்பியா: அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர்.

அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லா மரினாவில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லூயிசா பெர்ணான்டா உர்ரியா.

அண்மையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையை எடினோரா ஜிமெனெஸ்(59) என்பவர் கண்டுபிடித்தார்.

உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த லூயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார்.

குழந்தையை தனது மார்போடு அணைத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

லூயிசா பால் கொடுத்ததால் தான் குழந்தை உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயை தேடி வருகிறார்கள். குழந்தையின் தாய் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே குழந்தையை கண்டெடுத்த எடினோரா கூறுகையில், நான் ஆரஞ்சுப் பழங்கள் பறித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஏதோ அழுகுரல் கேட்டது. முதலில் பூனை என்று நினைத்தேன். அருகில் சென்று பார்த்தபோது தான் அது பெண் குழந்தை என்று தெரிந்தது.

அது பிறந்த சில மணிநேரம் தான் இருக்கும். அதன் தொப்புள்கொடி கூட சரியாக அறுக்கப்படவில்லை என்றார்.

Share.
Leave A Reply