அபர்தீன்: ஸ்காட்லாந்தில் கபாப் கடைக்கு வெளியே இரு பெண்கள் சண்டைபோட்டு ஒருவரின் உடையை மற்றொருவர் கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் நகரத்தில் இருக்கும் வின்ட்மில் பிரேவில் செயல்படும் கபாப் கடைக்கு வெளியே இரு பெண்கள் இடையே சண்டை ஏற்பட்டது. வெள்ளை நிற உடை அணிந்திருந்த அந்த பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அவர்கள் ஒருவரின் உடையை மற்றொருவர் கிழித்து பயங்கரமாக சண்டை போட்டனர். கட்டி உருண்ட அவர்களை பொதுமக்கள் விலக்கி விட்டனர்.

அப்படியும் மறுபடியும் சண்டைக்கு பாய்ந்தனர். பின்னர் ஒரு வழியாக அவர்களின் சண்டை முடிந்தது. இந்த சண்டை காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
