உலகில் எத்­த­னையோ குழுக்கள் ஆயு­த­மேந்திப் போரா­டு­கின்­றன. ஒவ்­வொரு குழு­விற்கும் ஒவ்­வொரு நோக்­கம். பல குழுக்கள் தமது நோக்­கத்தை பெயரில் வெளிப்­ப­டுத்த முனையும்.

தமது நோக்­கத்தை மற்­ற­வர்கள் இல­கு­வாக அறிந்து கொள்ளும் வகையில், தத்­த­மது பெயர்­களைத் தெரிவு செய்து கொள்ளும் வழக்கம் உண்டு.

இன்­றைய உலகில் அதிகம் பேசப்­படும் இயக்கம், இஸ்­லா­மிய இராச்­சியம் ஆகும். இந்தப் பெயரும் நோக்கம் சார்ந்­தது தான். உலகின் பரந்­து­பட்­ட­தொரு நிலப்­ப­ரப்பில் இஸ்­லா­மி­யர்கள் வாழும் இராச்­சி­யத்தை ஏற்­ப­டுத்­துதல் என்­பது இயக்கத்தின் நோக்கம்.

இந்த நோக்­கத்­திற்கும், இயக்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கும் இடை­யி­லான முரண் சம­கால உலகில் பெரும் விவாதத்திற்கு­ரிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

இஸ்­லா­மிய இராச்­சியம் இஸ்­லாத்­திற்கு ஏற்­பு­டை­யது தானா என்­பதும், இஸ்­லா­மிய இராச்­சி­யத்தை இஸ்­லா­மிய மக்களின் அடை­யா­ள­மாகக் கருத முடி­யுமா என்­பதும் விவா­தத்தின் மையப்­பொருள்.

ஈராக்­கிலும், சிரி­யா­விலும் வலு­வாகக் கால்­ப­தித்­துள்ள இயக்கம். தான் சரி­யா­ன­தெனக் கருதும் கொள்­கை­க­ளையும், கோட்­பா­டு­க­ளையும் வரித்துக் கொண்டு, அவற்றின் அடிப்­ப­டையில் செயற்­படும் இயக்­க­மாக இஸ்­லா­மிய இராச்சியத்தைக் குறிப்­பிட முடியும்.

இதன் இயக்­கத்தைத் தீர்­மா­னிக்கும் கொள்­கை­களும் கோட்­பா­டு­களும் இஸ்லாம் போதித்­த­மைக்கு முர­ணா­னவை என்பது இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்­களின் வாதம்.

இதன் செயற்­பா­டுகள் இஸ்­லாத்­திற்கு முர­ணா­ன­வை­யாக இருந்­தாலும், இதன் கோட்­பா­டு­களின் மூலா­தாரம் இஸ்லாம் தான் என்­பது மேற்­கு­லக வல­து­சா­ரி­களின் வாத­மாக இருக்­கி­றது.

இவ்­விரு கருத்­தி­யல்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல்­களின் அடிப்­ப­டையில் இன்று உல­கெங்­கிலும் வாழும் இஸ்லாமியர்கள் மீதான பார்வை தீர்­மா­னிக்­கப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்தக் கருத்­தியல் மோதல், நபி பெரு­மா­னாரின் போத­னை­களை நம்­பிக்­கை­யுடன் பின்­பற்றும் ஒரு­வரை இஸ்லாமியராக நோக்­கு­வ­தற்கும், தீவி­ர­வா­தி­யாக முத்­திரை குத்­து­வ­தற்கும் ஏது­வான பின்­பு­லத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெ­ரிக்­காவில் உலக வர்த்­தக மைய இரட்டைக் கோபு­ரங்கள்; தாக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, அமெ­ரிக்க மண்ணில் கால் பதித்த ஒவ்­வொரு முஸ்­லிமும் தீவி­ர­வா­தி­யாக சந்­தே­கிக்­கப்­பட்டார்.

கடந்த ஆண்டு பிரான்ஸின் தலை­ந­கரில் குண்­டுகள் வெடித்து, துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ஐரோப்­பாவில் வாழும் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் மீது சந்­தே­கத்தின் சாயல் படிந்­தது.

பாரிஸ் தாக்­கு­தலின் பாணியில், கடந்த வாரம் இந்­தோ­னே­ஷியத் தலை­ந­கரில் கூட்­டாக நடத்­தப்­பட்ட தாக்­குதல் இஸ்லா­மி­யர்கள் மீதான பார்­வையை மாற்­றி­யி­ருக்­கி­றதா?என்­பது முக்­கி­ய­மான கேள்வி.

முஸ்­லிம்கள் யாவரும் ஒன்­றாக வாழக்­கூடிய பரந்த நிலப்­ப­ரப்பு என்­பது இஸ்­லா­மிய போத­னை­களில் கூறப்­பட்ட விடய­மாக இருக்­கலாம்.

எனினும், இந்த நோக்­கத்தை அடை­வ­தற்கு இஸ்­லா­மிய இராச்­சிய இயக்கம் அனு­ச­ரிக்­கக்­கூ­டிய நடை­மு­றைகள் இஸ்லாத்­திற்கு பொருந்­தாது என்­பதை மார்க்க அறி­ஞர்கள் தெளி­வான முறையில் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்கள்.

ஒரு இஸ்­லா­மியர் எவ்­வாறு கௌர­வ­மான முறையில் வாழலாம் என்­பதை நபி பெரு­மானார் விப­ரித்­தி­ருக்­கிறார்.

அவர் விப­ரித்த விட­யங்­களை எல்லாம் இஸ்­லா­மிய இராச்­சிய இயக்கம் எவ்­வாறு மீறு­கி­றது என்­பதை மார்க்க அறிஞர்கள் குறிப்­பிட்­டுள்­ளார்கள்.

அப்­பா­விகள், கைதிகள், தூது­வர்கள் போன்­ற­வர்­களைக் கொல்­வதும், பெண்கள், சிறு­வர்கள் ஆகி­யோரின் உரி­மை­களை மறுப்­பதும், மற்­ற­வர்­களை அடி­மை­யாக நடத்­து­வதும், சட­லங்­களை சிதைப்­பதும், கல்­ல­றை­களை நிர்­மூ­ல­மாக்­கு­வதும், ஏனைய மதங்­களைப் பின்­பற்றும் மக்­களை துன்­பு­றுத்­து­வதும் இஸ்­லாத்தில் தடை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

fighters_3200160bஇஸ்­லா­மிய இராச்­சியம் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இயக்கம் இத்­த­கைய செயல்­களை வெளிப்­ப­டை­யாக செய்து வரு­வதை மார்க்க அறி­ஞர்கள் தெளி­வாக வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அது தவி­ரவும், இஸ்­லா­மிய இராச்­சி­யத்தை உலக முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைப்­பாக கருத முடி­யாது என்­ப­தையும் அவர்கள் விப­ரித்­துள்­ளார்கள்.

ஒரு பிராந்­தி­யத்தில் இஸ்­லா­மிய இராச்­சியம் அமைக்­கப்­பட வேண்­டு­மாயின், அந்தப் பிராந்­தி­யத்தில் வாழும் முஸ்லிம்களின் இணக்­கப்­பாடு அவ­சியம்.

எந்த விட­யத்­திற்கு எதி­ரா­கவும் பத்வா பிறப்­பிக்க வேண்­டு­மானால், சமயம் பற்­றிய தீர்க்கமான அறிவு அவ­சியம்.

அல்­குர்­ஆனை முழு­மை­யாக புரிந்து கொள்­ளாமல் ஒரு வாச­கத்தை மாத்­திரம் பொறுக்­கி­யெ­டுத்து, தமக்கு ஏற்­ற­வாறு அர்த்தம் கற்­பித்து அதன் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வதும் தவ­றா­னது.

இந்தத் தவ­று­களை சளைக்­காமல் செய்யும் இஸ்­லா­மிய இராச்­சிய இயக்­கத்­திற்கு, இஸ்லாம் என்ற பெயர் சூட்­டி­யதே தவ­றான விடயம் என்­பதை மார்க்க அறி­ஞர்கள் கூறி வந்­தி­ருக்­கி­றார்கள்.

இஸ்­லாத்தை வன்­மு­றையின் மத­மாக சித்­திரிக்கும் நோக்கம், மேற்­கு­லகின் அர­சியல் நலன்­சார்ந்த தேவை­யாகும்.

இந்த நோக்­கத்தின் மத்­தியில், மித­வாத முஸ்­லிம்­களின் தர்க்க ரீதி­யான விளக்­கங்கள் எடு­ப­டு­வ­தில்லை.

தம்மை இஸ்­லாத்தின் பெயரால் அழைத்துக் கொள்ளும் இயக்கம் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து விடும் சந்­தர்ப்­பத்தில், இது இஸ்­லாத்தின் தவறு என்ற பிர­சாரம் தீவிரம் பெறும்.

இந்தப் பிர­சாரம், வெளிப்­ப­டை­யா­ன­தாக இருப்­ப­தில்லை. பெரும்­பாலும், இஸ்­லா­மி­யர்கள் மீதான எதிர் நட­வ­டிக்­கைகள் ஊடாக வெளிப்­படும்.

LiveLeak-dot-com-682_1452818076-3_1452818111.jpg.resizedஇது நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ எல்லா நாடு­க­ளிலும் பர­வி­யி­ருப்­பதைக் காணலாம்.

இதற்கு மிகச்­சி­றந்த உதா­ரணம், இலங்­கையின் சமீ­பத்­திய சிங்­ஹ லே பிர­சார இயக்கம்.

இஸ்­லா­மிய இராச்­சியம் சுய­பி­ர­கடனம் செய்து கொண்ட பெயரின் மூலம் அந்த இயக்­கத்தை விப­ரிக்க முற்­படும் எவரும், கடந்த வாரம் இந்­தோ­னே­ஷியத் தலை­ந­கரில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை அவ­தா­னிக்க வேண்டும்.

இம்­முறை இஸ்­லா­மிய இராச்­சிய இயக்கம் இலக்கு வைத்­தி­ருப்­பது அமெ­ரிக்­காவை அல்ல. ஐரோப்­பாவைச் சேர்ந்த வேறெந்த நாட்­டையும் அல்ல.

சனத்­தொ­கையில் கூடு­த­லான முஸ்­லிம்­களைக் கொண்ட நாடு­களின் பட்­டி­யலில் இரண்­டா­வது இடத்­தி­லுள்ள நாட்டையாகும்.

இந்தத் தாக்­கு­தலில் இந்­தோ­னே­ஷிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரும், கனே­டிய பிர­ஜையும் கொல்­லப்­பட்­டார்கள்.

தாக்­கு­தலை நடத்த வந்த ஆயு­த­பா­ணி­க­ளுக்குத் தெளி­வான திட்டம் எதுவும் இருக்­க­வில்லை என்­பது, இலக்கு குறித்த அவர்­களின் தடு­மாற்­றத்தில் தெரி­ய­வந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

எனினும், பாரிஸ் நகர தாக்­குதல் பாணியை பின்­பற்றும் நோக்கம் ஆயு­த­தா­ரி­க­ளுக்கு இருந்­த­தாகத் தெரி­கி­றது எனவும் பொலிஸார் கூறு­கின்­றனர்.

இத­னையும் தர்க்க ரீதி­யாக ஆராய வேண்டும். பாரிஸ் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை 130ஐத் தாண்டுகிறது.

ஆயு­த­தா­ரி­களின் நோக்கம் வெற்றி பெற்றிருந்தால், ஜகார்த்தாவிலும் கூடுதலான மரணங்கள் சம்பவித்திருக்கக்கூடும். அங்கு முஸ்லிம்களே மரணித்திருப்பார்கள்.

இந்தோனேஷிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்பதாலோ, இந்தோனேஷியாவில் இருப்பது மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசியல் யாப்பு என்பதாலோ, இங்கு முஸ்லிம்களைக் கொல்ல முடியுமா? அப்பாவி முஸ்லிம்களைக் கொல்வது தான் இஸ்லாமிய இராச்சியத்தின் நோக்கம் என்றால், அதனை இஸ்லாத்திற்காக போராடும் இயக்கமாகக் கருத முடியுமா?

இன்றைய உலக அரசியலில் இஸ்லாத்தின் பெயரை வரித்துக் கொண்டு இயங்கும் ஆயுதபாணி இயக்கங்களின் அடிப்படையில், இஸ்லாத்தை வன்முறை மதமாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முனைபவர்கள், இந்தக் கேள்விகள் பற்றி சற்று ஆழமாக சிந்திப்பது அவசியம்.

Share.
Leave A Reply