இலங்கை தமி­ழ­ரசு கட்சி என்று ஒரு இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு அர­சியல் கட்­சி­யொன்றை அமை ப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை  singaleஉருவாக்­ கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார்.

இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாகசெயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.

இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள இளை­ஞர்கள் அர­சாங்­கத்தின் இவ்­வா­றான செயற்­பா­டு­களை தடுத்து தமது அடை­யா­ ளத்­தினை பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கப்

பட்ட ஒரு அமைப்­பா­கவே சிங்­கலே அமைப்பை தான் கரு­து­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். சிங்­கலே அமைப்பு நாடளாவிய ரீதியில் தமது வாசகம் மற்றும் இலச்­சினை பொறிக்­கப்­பட்டஸ்டிக்­கர்­களை வாக­னங்­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் ஒட்டி வரு­கின்­றனர். இது தொடர்பில் கருத்து கேட்ட போதே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

இந்த புதிய அர­சாங்கம் மிகவும் தவ­றான பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­துடன் நாட்டின் எதிர்­கா­லமும் சவா­லுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது என்­பதை தற்­போது காண­மு­டி­கி­றது.

நாட்­டிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக இருந்த புலிகள் இயக்­கத்தை கடந்த அர­சாங்கம் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர் தியா­கங்­க­ளோடு துடைத்­தெ­ரிந்­தது இதனை எவ­ராலும் மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது.

இவ்­வாறு எமது முப்­ப­டை­யி­னரும் தமது உயிரை பணயம் வைத்து எமக்கு பெற்­றுக்­கொ­டுத்த அமை­திச்­சூ­ழலை மீண்டும் குழப்­பி­ய­டிக்க எவ­ருக்கும் இட­ம­ளிக்கக் கூடாது.

இன்று வடக்­கி­லுள்ள இரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ளன. சிறை­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்த விடு­தலை புலி உறுப்­பி­னர்கள் பலர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன் எஞ்­சி­யோ­ரையும் விடு­விக்க அர­சாங்கம் முயன்று வருகிறது.

இது மிகவும் பயங்­க­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான ஒரு செயற்­பா­டாகும்.

புலிகள் இயக்­கத்தின் ஆயு­த­ரீ­தி­யான செயற்­பா­டுகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும் அவர்­களின் ஏனைய செயற்­பா­டுகள் இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை.

அவை தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் மிக தெளி­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

எனவே எமது நாட்டின் உள்­ளக விவ­கா­ரங்­க­ளையும் சர்­வ­தேச நகர்­வு­க­ளையும் அதற்­கேற்ற வகையில் முன்­னெ­டுக்க வேண்டும்.

இல்­லையேல் எமது அடை­யாளம் அழிக்­கப்­ப­டு­வ­துடன் மீண்டும் நாட்டில் பிரி­வி­னை­வா­தமும் பயங்­க­ர­வா­தமும் தலைத்­துக்கும் நிலை உரு­வா­கக்­கூடும்.

இவ்­வா­றான நிலை­யி­லி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு யாவ­ருக்கும் உள்ளது.

தமது அடை­யா­ளத்தை பாது­காத்து அரசின் தவ­றான பாதை­யி­லான பய­ணத்தை தடுப்­ப­தற்­காக இளை­ஞர்­களால் உருவாக்­கப்­பட்ட சிங்­கலே அமைப்­பா­னது நல்­ல­தொரு செயற்­பா­டாகும்.

அதில் எவ்­வித தவறும் இல்லை. அவ்­வா­றான அமைப்பை அமைக்கும் சகல உரி­மையும் அவர்­க­ளுக்கு உண்டு.

தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற பல கட்சிகள் தமது இன, குழு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இவ்வாறான பெயர்களுக்கு அரசாங்கமும் எந்த வகையிலும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் சிங்கலே என்ற அமைப்பை ஏன் எதிர்க்கும் வகையில் நோக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

Share.
Leave A Reply