அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின் போது, தனது சட்டைப் பையில் எடுத்துச் செல்லும் மத ரீதியான அன்பளிப்புகளை காண்பித்துள்ளார்.
யூரியூப் ஊடகவியலாளரான இங்கிறித் நில்ஸனுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு தன் சட்டைப் பையிலுள்ள மத ரீதியான அன்பளிப்புகளைக் காண்பித்துள்ளார்.
அவரால் காண்பிக்கப்பட்ட அன்பளிப்புகளில் பாப்பரசரால் அவருக்கு வழங்கப்பட்ட ஜெபமாலை, இந்து மதகுரு ஒருவரால் வழங்கப்பட்டிருந்த சிறிய அனுமார் சிலை மற்றும் பௌத்த துறவியொருவரால் வழங்கப்பட்டிருந்த சிறிய புத்தர் சிலை என்பன உள்ளடங்குகின்றன.
இது தொடர்பில் பராக் ஒபாமா கூறுகையில், “நான் அவற்றை எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன். அவற்றை என்னுடன் எடுத்துச் செல்வது நான் எனது பயணத்தில் சந்தித்த வேறுபட்ட மனிதர்களை தனக்கு ஞாபகப்படுத்துவதாக உள்ளது” என அவர் கூறினார்.
அத்துடன் அவை அமைதி, புரிந்துணர்வு, நீதியான நடத்தை என்பன தொடர்பில் தன்னை சிந்திக்க வைக்க உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.