யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் நேற்று இரவு 11 மணியளவில் ஈரப்பெரியகுளம் கல்குண்டான் மடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மருதங்கடவலையை சேர்ந்த எம்.நஸீர் (38) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மூவர் படுகாயமடைந்ததுடன் 5 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

Accident 02

Share.
Leave A Reply