தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான தமிழர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

53 வயதான ஜீ.யோகேந்திரன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில், ஜேர்மனியின் ஹம்பார்க் பகுதியில் நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் ஹம்பார் நகரிலுள்ள நீதிமன்ற வழங்கறிஞர் ஒருவர், யோகேந்திரன் புலிகளுக்காக 81000 யூரோக்களுக்கும் மேற்பட்ட நிதியை சேகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2007ம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் குடியுரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் இவர், முதல் நாள் விசாரணைகளின் போது தமது பக்க நியாயம் தொடர்பில் எதனையும் நீதிமன்றில் கூறவில்லை என தெரியவந்துள்ளது.

அவரது தரப்பு சட்டவாளர் பேசுவதற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை. வரும் மார்ச் 7ஆம் நாள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply