சுவிஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.

கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனையை சுவிஸ் மக்கள் கட்சி(SVP) முன்வைத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறியும் விதமாக பிப்ரவரி மாதம் 28ம் திகதி வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளது.

இந்நிலையில் SVPயின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கிறிஸ்துவ ஜனநாயக கட்சியை சேர்ந்த பிலிப்பொ லொம்பார்டி கூறியதாவது, இந்த யோசனையின் மூலம் சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் ஏற்படும்.

உதாரணமாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடிமகனுடன் இணைந்து மது பாட்டில்களை திருடினார் என்றால் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

ஆனால் சுவிஸ் குடிமகன் வெறும் அபராதத்துடன் தப்பித்துக்கொள்வார். இவ்வாறு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வரை வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸில் நடமாடும் நாகரீக கொள்ளையர்கள்: பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை
19-01-2016
robbery_gun_001சுவிட்சர்லாந்து நாட்டில் நாகரீகமாக உடை உடுத்திக்கொண்டு முதியவர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேசில் மாகாணத்தில் உள்ள Pratteln என்ற நகரில் 75 வயதான முதியவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் அங்குள்ள Credit Suisse வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால், முதியவரை ஒரு கார் பின் தொடர்ந்து வந்ததை அவர் கவனிக்கவில்லை. ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற சில பிராங்குகளை எடுத்துக்கொண்டு முதியவர் திரும்பியுள்ளார்.

அப்போது காரில் இருந்து திடீரென வெளியான 32 வயதான நபர் ஒருவர் முதியவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

உயிருக்கு பயந்த அந்த முதியவர் சற்று முன்னர் எடுத்த பணம் முழுவதையும் அந்த கொள்ளையனிடம் கொடுத்துவிடுகிறார்.

கொள்ளையன் இதோடு விடாமல், துப்பாக்கியை காட்டி முதியவரிடம் இருந்த ஏ.டி.எம் அட்டையையும் அதன் ரகசிய PIN எண்களையும் கேட்டுள்ளான்.

கொள்ளையன் மிரட்டியவும் முதியவர் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். பின்னர், ஏ.டி.எம் அட்டையுடன் உள்ளே சென்ற அந்த நபர் கணக்கில் இருந்த அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பி விடுகிறார்.

சனிக்கிழமை நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த முதியவர் நேற்று தான் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், ‘இத்தாலி மொழி பேசிய அந்த கொள்ளையன் ஒரு ஆடம்பர காரில் வந்ததாகவும், பார்ப்பதற்கு வசதி படைத்தவன்போல் காட்சியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முதியவரின் தகவலை தொடர்ந்து, Pratteln நகரில் நாகரீகமாக கொள்ளையர்கள் நடமாடும் சந்தேகம் எழுந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply