நீர்கொழும்பு, குரன பிரதேசத்தில் குடிபோதையில் நபரொருவர் செலுத்திய வாகனம் மோதியதில் விமானப் படை வீர ரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியும் வெளியாகியுள்ளது.
விடுமுறை முடிந்து படைத்தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வீரர் ஒரு பிள்ளையின் தந்தையெனவும் , மனைவி அடுத்த குழந்தைக்காக கர்ப்பவதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.