பிரித்தானிய யுவதி முச்சக்கர வண்டியொன்றை செலுத்திக் கொண்டு இலங்கையில் பல இடங்களுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

143421கெஸீ ட்ரேவிஸ் எனும் இந்த யுவதி முச்சக்கர வாகனங்கள் மீது அதீத ஆசையை கொண்டவராக் காணப்படுகிறார்.

143424சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த இவர், இங்குள்ள ஆட்டோ எனும் முச்சக்கரவாகனங்களை பார்த்ததன் பின்னர் அவற்றின் மீதிருந்த அளவு கடந்த ஆசையினால் தனக்கென ஒரு முச்சக்கர வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாராம்.

அதையடுத்து, முச்சக்கர வாகனம் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதுடன் தனக்கென ஒரு முச்சக்கர வாகனத்தையும் வாங்கியுள்ளார். தற்போது அவரை பலர் “டுக் டுக் பெண்”என அழைக்கின்றனர்.

14343_2கெஸீ, தனது முச்சக்கர வாகனத்தை தனக்கேற்றவாறு முற்றிலும் மாற்றியமைத்துள்ளதோடு அதன் பின்னால் ‘டுக் டுக். எனது வாழ்க்கை. ஆண் நண்பர்களை விட நேசிக்கிறேன்’ என்று அச்சிட்டுள்ளார்.

14343_3தற்போது அவர் தனக்கு சொந்தமான முச்சக்கரவண்டியில் நாடு முழுவதும் வலம் வருவதுடன் இலங்கையிலேயே தொழிலும் புரிந்து வருகின்றார்.

14343_8இரண்டு மாதங்கள் முச்சக்கர வாகனம் செலுத்தவதற்காக 2 மாதங்கள் பயிற்சி பெற்றதாகவும் அவர் இலங்கைக்கு வருவதற்கான பிரதான காரணம் “டுக் டுக்” தான் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply