கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ். பொங்கல் விழாவில் கூறிய கருத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உடன்பாடு கிடையாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த தாம் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

 

‘சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ கூட்டமைப்பு வலியுறுத்தல்

160121171031_sampanthar_sumanthiran_tna_512x288_bbc_nocreditதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்

இலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தக் கருத்து வந்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு, அதையும் உள்ளடக்கி அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் முன் வைக்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் இந்தத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் சுமந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

160121075653_kilinochi_demo_512x288_bbc_nocredit

 கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயம், காணாமல் போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.

அவர்களிடம் உரையாடிய கூட்டமைப்பின் தலைவரும், நாட்டின் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் இந்த விஷயம் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில் எழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply