வைத்தியசாலையில் வைத்து 14 நாட்கள் மட்டுமே வயதுள்ள பெண் சிசுவை கொலை செய்த தாய் எதிர்வரும் (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொரளை காசல் ஆஸ்பத்திரியிலே இக் கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளது.

34 வயதான மேற்படி பெண் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வந்துள்ளார் இதன்போது இப்பெண் தனது சிசுவை கொலை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பொரளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பிந்திக் கிடைத்த தவல்களின் படி மன அழுத்தம் காரணமாக இவர் தமது சிசுவை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தனது குழந்தையை இவர் கழுத்து நெறித்து கொண்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ள போதும் நேற்று பிரேத பரிசோதனை நிறைவடையாத நிலையில் இது குறித்து உறுதியாக கூற முடியாதிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் மாதிவெல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, இவருக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply