சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவரது நிஜ மகள் திவ்யா.
வேட்டைக்காரனின் மகனை அறிமுகம் செய்தவர், தெறியில் மகளை அறிமுகம் செய்திருக்கிறார். சின்ன வயதில் விஜய், அப்பா சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
சின்ன வயது விஜயகாந்த் ஆக நடித்து வந்த விஜய் நாளையதீர்ப்பு படத்தில் ஹீரோவானார். சில படங்கள் ப்ளாப் ஆனாலும் அன்றைய சூழ்நிலையில் ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக சொல்லிக்கொள்ளும் படியாக ஹீரோக்கள் யாரும் இல்லை என்பதால் பூவே உனக்காக, லவ் டுடே என சில படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்கவே ரசிகர்களும் விஜயை ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர்.
போட்டியாக அஜீத் வரவே இருவரின் ரசிகர்களும் மாறி மாறி வசை பாடி அஜீத் விஜயை வளர்த்து விட்டனர். சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்ட விஜய்க்கு சஞ்சய், திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.21-1453361329-vijay-with-son-600

விஜய் மகன் சஞ்சய்
தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படமும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். தனது குழந்தைகளின் புகைப்படமே பத்தி‌ரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பல‌ரின் புருவங்களை உயரச் செய்தது.21-1453361344-vijay-withis-son-600

வேட்டைக்காரனில் மகன்
அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் தன்னுடன் நடனமாட வைத்தார் அப்போதே பட்டையை கிளப்பிய சஞ்சய் இப்போது படிப்பில் கவனம் செலுத்துகிறார். இப்போது மகள் திவ்யாவை நடிக்க வைத்துள்ளார் விஜய்.
21-1453361395-theri4565

தெறி படத்தில் விஜய்
அட்லீ இயக்கத்தில் ‘தெறி’. படத்தில் விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார்.
21-1453361463-vijay-with-daughter-600

விஜய் மகள் திவ்யா
தெறி படத்தில் விஜய்யின் மகள் திவ்யாவும் நடித்திருக்கிறார். விஜய், ஏமி ஜாக்சன், திவ்யா ஆகியோர் காட்சிகளைத் தான் இறுதிகட்டமாக லடாக்கில் படமாக்கியிருக்கிறது படக்குழு.
21-1453361548-vijay-with-daughter-s1-600

அப்பாவின் செல்ல மகள்
படத்தில் விஜய்யின் மகளாக சிறு வயதில் வருபவராக நடிகை மீனாவின் மகள் நைனிகாவும், சற்று வயது கூடியதும் அந்தக் கதாபாத்திரத்தில் வருபவராக விஜய்யின் மகள் திவ்யாவும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வேட்டைக்காரனில் மகனை அறிமுகம் செய்த விஜய் தெறி படத்தில் மகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளார் விஜய். ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிடும் முனைப்பில் இறுதிகட்டப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது படக்குழு.
Share.
Leave A Reply