மித்தெனிய – காரியமடித்த பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டும், மேலும் ஒருவர் சுருக்கிட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்துள்ளவர்கள் 25 வயதினையுடைய இளைஞர்கள், இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை கொலை செய்யப்பட்ட இளைஞனின் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சுருக்கிட்ட இளைஞனின் சடலத்தை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
சுருக்கிட்ட இளைஞன் குறித்த கொலையை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள நிலையில், மிதெனிய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.