அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சன்னி லியோன் ‘ஜிஸ்ம் 2’ படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி, இப்போது பொலிவூட்டில் முன்னிலை நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது புபேந்திரா சௌத்திரி எனும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரால் ஆபாசமாகவும், அனைவரும் முகம் சுளிக்கும் வகையிலும் கேட்கப்பட்ட கேள்விகளால் பெரும் பரபரப்புகள் கிளம்பியுள்ளன.
இதேவேளை, அவரின் எடக்குமடக்கான பல கேள்விகளுக்கு சன்னி லியோன் இலாவகமாகப் பதில் சொல்லி அசத்தியுள்ளார்.
தற்போது ஜனவரி 29 இல் வெளியாகவுள்ள தனது ‘மஸ்திஜாடே’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் மற்றும் நிருபர் ஒருவர் சன்னி லியோனிடம் கேட்ட கேள்விகள், பலபொலிவூட் பிரபலங்களை கொதித்தெழ செய்துள்ளது.
‘‘பணத்துக்காகத்தானே நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்கூட பணத்துக்காகத்தானே என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள்?’ என்று மடக்கினார் சன்னி லியோன்.
” தங்களது படங்களை பார்க்க நிறைய திருமணமான பெண்களின் கணவர்கள் வருகின்றனரே, அதை பற்றி நீங்கள் கவலைப்படுவதே இல்லையா?, நீங்கள் அமீர் கானுடன் பணியாற்ற விரும்புகிறீர்கள். ஆனால், அமீர் கான் தங்களுடன் பணியாற்ற விரும்புவாரா?, “
“உங்களால் இந்திய அறநெறி கெடுதலுக்கு உள்ளாகியுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்றத்தில் கூறியதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? நீங்கள் ஒரு முன்னாள் பாலியல் படம் சார்ந்த தொழிலாளி என ஒப்புக்கொள்கிறீர்களா?
இந்தியாவிற்கு தாங்கள் வந்ததிலிருந்து ஆபாச படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே, இதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா போன்ற கேள்விகளை ஊடகவியலாளர் கேட்டுள்ளார்.
இக்கேள்விகளுக்கு துணிச்சலாக பதிலளித்தார் சன்னி லியோன். தமது கணவருக்கு சன்னி லியோன் ஓர் அச்சுறுத்தல் என திருமணமான பெண்கள் கருதுகிறார்கள். தமது கணவரை சன்னி லியோன் பறித்துக்கொள்வார் என அஞ்சுகிறார்களே என கேட்டகப்பட்ட கேள்விக்கு,
“உங்கள் கணவர்கள் எனக்கு வேண்டியதில்லை. என்கு சொந்தமாக ஒருவர் உள்ளார். அவரை நான் நேசிக்கிறேன். அவர் மிக வசீகரமான, திறமையான செக்ஸியானவர்” என சன்னி பதிலளித்தார்.
சன்னி லியோனின் படங்களை பார்ப்பவர்கள் உங்களை பேட்டி காண்பதால் தமது மனம் களங்கமடைகிறது என பலர் எண்ணுகின்றனர். நான் உங்களை செவ்வி காண்கிறேன். அதனால் எனது மனம் களங்கமடைகிறதா எனவும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, உங்களுக்குத் தேவையானால் நான் போய்விடுகிறேன்” என சன்னி பதிலளித்தபோது மேற்படி ஊடகவியலாளர் தடுமாறினார்.
சன்னி நிதானமாகவும், அமைதியாகவும் பதிலளித்துள்ளதை பலர் பாராட்டினாலும், இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பலர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடிப்பவராக இருப்பினும் , அவரும் ஒரு மனிதர், பெண் என நினைக்காமல் இப்படியும் கேள்விகள் கேட்கலாமா? எனப் பலரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
அந்த வீடியோவில் சன்னி லியோன் பல கேள்விகளுக்கு அமைதியாக சிரித்த வண்ணம் பதிலளிக்கிறார் என்றாலும் சில கேள்விகளுக்கு அவரால் மேற்கொண்டு பேச முடியாது தவிப்பதும் அப்பட்டமாகவே தெரிவது பலரையும் கோபமாக்கியுள்ளது.
பொலிவூட் நட்சத்திரங்களான ரிஷி கபூர், அலியா பட், உட்பட சமூக வலைத்தள வாசிகள் பலர் சன்னி லியோனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
சன்னி லியோன் தனது கடந்த காலத்திலிருந்து மீண்டால்கூட, அதிலிருந்து புபேந்திரா சௌத்திரியினால் மீள முடிய வில்லை போலும் என சிலர் விமர்சித்துள்ளனர்.
20 நிமிடங்களாக ஒரே கேள்வியை அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என சிலர் விமர்சித்துள்ளனர்.