கல்­மு­னையில் 11 வரு­டங்­க­ளுக்கு முன் சுனா­மி­யின்­போது காணா­மல்­போ­னதாகக் கூறப்­படும் 16வயது சிறுமி அம்­பாறை சிறுவர் புக­லி­டத்தில் இருப்­ப­தாக அறிந்து பெற்றோர் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.

ஆனால் இரு பெற்­றோர் உரிமை கோரு­வதால் பிரச்­சினை எழுந்­துள்­ளது. கல்­முனை 02 வட்­டை­வி­தானை வீதியைச் சேர்ந்த எஸ்.ஜெய­ராஜா என்­பவர் தன்­பிள்ளை என உரிமை கோரி­யுள்ளார்.

இதே­வேளை, அட்­டா­ளைச்­சே­னையைச் சேர்ந்த ஒரு குடும்­பமும் உரி­மை­ கோ­ரி­யுள்­ளது. இப்­பிள்ளை கேசா­னியா ? முகமட் அப்­றாவா? என்­பதை நீதி­மன்­றமே முடிவு செய்­ய­வேண்டும் என கல்­முனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஏ.டபிள்யு. அப்துல் கபார் தெரிவித்தார்.

கல்­மு­னையைச் சேர்ந்த எஸ். ஜெய­ராஜா குறிப்­பி­டு­கையில்,

எனக்கு 10 வரு­டங்­க­ளுக்கு பிறகு பிறந்த பிள்­ளைதான் கேசானி. சுனா­மி­யன்­று­காலை கல்­முனை மாமாங்க அற­நெ­றிப் ­பா­ட­சாலைக்கு சென்­ற­ச­மயம் சுனாமி அடித்­தது.

அப்­போது அவ­ருக்கு வயது 5. நாமும் சுனா­மியால் பாதிக்­கப்­பட்டு பிள்­ளையைத் தேடினோம். யாரோ தூக்­கிக்­கொண்டு போன­தாக அறிந்தோம். அதன்பின் தேடாத இட­மில்லை. அலைந்தோம்,கத­றினோம் கிடைக்­க­வில்லை.

ஒலு­வி­லுக்­குச்­சென்று புகாரி என்­ப­வ­ரிடம் மைபோட்­டுப்­பார்த்தோம். அவர் சொன்னார். தற்­போது பறந்­தாலும் பிள்ளை கிடைக்­காது.

ஆனால் பத்து வரு­டங்­க­ளுக்­குப்­பிறகு கிடைக்கும் என்று. இந்­நி­லையில் கடந்த 11 ­வ­ரு­டங்­க­ளாக காத்­துக்­ கிடந்தோம். கடந்த வாரம் கல்­முனை ­பொ­லிஸில் ஒரு 16 வய­து­ ம­திக்­கத்­தக்க ஒரு பிள்ளை மீட்கப்­பட்­டி­ருப்­ப­தாக கேள்­விப்­பட்டேன். அங்கு சென்­ற­போது பிள்ளை உயி­ரோடு இருப்­பது தெரிந்­தது.

ஆனால் கல்­மு­னைப் ­பொலிஸார் அப்­பிள்­ளையை சிறுவர் நன்­ன­டத்தைப் பிரி­வி­னூ­டாக கல்­முனை நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்தி அம்­பாறை சிறுவர் புகலி­டத்­திற்கு அனுப்­பி­யுள்­ளனர்.

நானும் மனை­வியும் சிறுவர் நன்­ ந­டத்­தைப்­ பி­ரி­வினர் மற்றும் காரை­தீ­வி­லுள்ள மனித அபி­வி­ருத்தி தாப­னத்­தி­னரின் உத­வி­யோடு அம்­பாறை சென்று பிள்ளையைப் பார்த்­த­போது அவர் தாயைப்­பார்த்து கதறி அழுதார்.

அவ­ரது அங்க அடை­யா­ளங்­களை வைத்து எமது பிள்­ளைதான் என்­பதை உறு­திப்­ப­டுத்­தினோம். எம்­மிடம் பிறப்­பத்­தாட்சிப் பத்­தி­ர­மு­முண்டு. 5 வயதில் எடுத்த படமும் உண்டு.

ஆனால் பின்னர் சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் தனது கடந்­த­காலம் பற்றி எது­வுமே தெரி­யாது என்று கூறி­யுள்ளார். இதனிடையே மற்­று­மொரு குடும்பம் உரிமை கோரு­வ­தாக அங்கு சொல்­லப்­பட்­டது.

எனவே, நாம் எதிர்­வரும் திங்­க­ளன்று கல்­முனை நீதி­மன்­றத்தில் வழக்­குத்­தாக்கல் செய்­ய­வுள்ளோம். அத­னூ­டாக டி.என்.ஏ. பரி­சோ­தனை மூலம் சட்­டப்­படி பிள்­ளையை மீட்­டெ­டுக்­கலாம் என்று கரு­து­கின்றேன் என்றார்.

கல்­முனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எ.டபிள்யூ. அப்துல் கபா­ரிடம் கேட்­ட­போது அவர் இவ்­வாறு குறிப்­பி­டு­கின்றார்.

இப்­பிள்ளை தெருவில் அலைந்­த­தா­கக்­கூ­றிக்­கி­டைத்த தக­வ­லை­ய­டுத்து நாம் பொலிஸ்­ நிலை­யத்­திற்­குக்­கொ­ணர்ந்து கல்­முனை சிறு­வர் ­நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வி­ன­ரூ­டாக நீதி­மன்­றிற்­குப் ­பா­ரப்­ப­டுத்தி மாத்­தறை சிறு­வர்­ பு­க­லி­டத்­திற்கு அனுப்பு­வ­தற்­காக தற்­கா­லி­க­மாக அம்­பாறை சிறுவர் புக­லி­டத்தில் ஒப்­ப­டைத்­துள்ளோம்.

இவர் தான் ஒரு அனா­தை­யென்றும் முன்னர் கல்­மு­னைக்­கு­டியில் தனது பெரி­யம்மா, பெரி­யப்பா குடும்­பத்­தோடு வாழ்ந்த­தா­கவும் அங்கு அவர்கள் தன்னை வதை­செய்­வதால் தப்பி ஓடி­ய­தா­கவும் சொன்னார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில்; இவர் கடந்த வருட இறுதிப்பகுதியில் இப்படியாக மீட்கப்பட்டபோது அவரை திருமலை, கந்தளாய் சிறுவர் புகலிடத்திற்கு அனுப்பியிருந்தோம்.

அவர் அங்கிருந்து இம்மாதம் தப்பியோடிவந்து கல்முனையில் அலைந்தபோது இரண்டாவது தடவை யாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்போது அம்பாறையில் உள்ளார். யார் பெற்றோர் என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply