ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என கோஷங்களை எழுப்பி, காணாமல் போனோர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது பிள்ளைகள் மற்றும் அரசியல் கைதிகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அரசாங்கத்திடம் கேரிக்கை விடுத்தனர்.

வீடு வேண்டாம், நிவாரணம் வேண்டாம், எமது பிள்ளைகளை வெளியில் விடுங்கள், இரகசிய முகாம் இல்லை என கூறுகின்றீர்கள்.

தமது பிள்ளைகளை விடுதலை செய்யாவிடின் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்வோம், எமது பிள்ளைகள் இல்லை இனி எமக்கு உயிரும் வேண்டாமென்றும் கதறி அழுதார்கள்.

விக்கினேஸ்வரா!! நாம் இருவரும் மட்டற்ற மகிழ்சியோடு இருக்கிறோம்..!! இந்த மக்கள் ஏன் அழுதுவடிக்கிறார்கள்?? -(வீடியோ)

vikiஇந்த மக்கள் அழுவதை பார்த்து என் மனசு துடிதுடித்து போகிறது. எனக்கு  அழுகையே வந்திரும் போல் உள்ளது. நான் அதை  மறைப்பதற்காக சும்மா சிரித்துக்கொண்டிருக்கிறன்.  இவாகளின் துன்பதை வைத்து கட்டாயம் ஒரு “ஈழச் சோக காவியம்”  எழுதலாம் என்றுள்ளேன்.

துன்பத்தில் வாடும் -உங்கள்
துயர் கண்டு என் நெஞ்சம்
துடிதுடித்துப் போகிறது
துயரம் கொண்டு நானும்
துவண்டு போகாமல்

மட்டற்ற மகிழ்ச்சியாய்
இருப்பது போல் இன்புற்று
இயலாமையால் முன்புறுவல் பூத்து
முகத்தழகால் மூடிமறைக்க
முற்பட்டு  மூக்குடைபட்டு போகின்றேன்.

சோகம் வந்து வந்து
என் நெஞ்சையைடைக்கிறது
வீழ்ந்தால் உங்களோடு வீழ்ந்திருக்கவேண்டும்
அழுதால் உங்களோடு அழுதிருக்கவேண்டும்
அடக்க முடியாத அழுகை
என் நெஞ்சை அடைத்து  நிற்கிறது..
நான் என்ன செய்வேன்??

வீரமண்ணில் பிறந்த
உங்கள் மைந்தர்கள்
வீரத்துடன் போராடாமல்
வீணாக ஏன் காணமல் போனார்கள்?

வீரத்துடன்  இம் மண்ணில்
வீழ்ந்து புதைந்திருந்தால்
விலைபேச முடியாத -அவர்
வீரத்தை வீரவாள் கொண்டு
வீரகாவியம் படைத்திருப்பேனே!

கவலைகளை விட்டுவிடுங்கள்
கண்ணீரை துடையுங்கள்
முள்ளிவாய்கால் முடிவல்ல
வட்டு வாய்காலில் வடிந்தோடிய -உங்கள்
இரத்தம் வயல்வெளியெங்கும்
வடிந்தோடி நந்திக்கடலில்
சங்கமித்ததை நானறிவேன்!

ஷெல்லடியில் செத்தும்
சாகமலும் புதைபோன
உங்கள் செல்வங்களின் புத்துடல்கள்
புதைக்கப்படவில்லை
புதிதாக விதைக்கப்பட்டுள்ளது
புத்துயிர் பெற்று மீண்டு மீண்டும் பிறப்பீர்!

மீண்டும் மீண்டும் நான் வருவேன்
மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி
மகுடத்தில் என்னை ஏற்றுங்கள்
வீரகாவியம் காவியம் படைக்க
விலை பேசமாட்டேன்
காத்திருங்கள் கலங்காமல்…

வைரமுத்து படைக்கப்போகும்  “ஈழ காவியம்” ஒரு பகுதி இப்படியிருக்கலாம்…

எழுதியவர்
-கவிஞர் வரதராஜன்-

880268446missing2

Share.
Leave A Reply