யாழ்ப்பாணத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை நடந்த கலியாண நிகழ்வில் மாப்பிளைக்கு செருப்படி நடந்துள்ளது. கலியாண வீட்டுக்கு வந்த யுவதி ஒருவர் தாலி கட்டி முடிந்த பின்னர்

அறுகரிசி போடும் நிகழ்வில் வரிசையில் நின்று வந்து மாப்பிளைக்கு அருகில் வந்தவுடன் தனது கைப் பையினுள் இருந்து செருப்பு ஒன்றை எடுத்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கியுள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்றவர்கள் யுவதியைப் பிடித்து கீழே இறக்கினர். குறித்த யுவதி எதற்காக செருப்பால் அடித்தார் என்பது தெரியவில்லை எனவும் பெண் வீட்டார் இது தொடர்பாக யுவதியிடம் வினாவிய போது ‘அதனை அவனிடமே கேளுங்கள்‘ என யுவதி கூறியதால் யுவதியை பெண் வீட்டார் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது மாப்பிளை வீட்டார் அவளை ஒப்படைக்காது வெளியேற்ற முயன்றதாலும் அங்கு பதற்றி நிலை தோன்றியதாகத் தெரியவருகின்றது.

மாப்பிளைக்கு செருப்படி வீழ்ந்தவுடனேயே மணப்பெண் இது தொடர்பாக மாப்பிளையிடம் கேட்ட போது மாப்பிளை பதிலளிக்காது இருந்தால் மணப் பெண் மணவறையை விட்டு வெளியேறியுள்ளார்.

மாப்பிளைக்கு செருப்பால் அடித்த யுவதியை அங்கு நின்ற பெண் வீட்டைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தாக்கிய போது அப்பெண்ணையும் யுவதி தலையில் பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

‘அவனை என்னவென்று கேட்டுவிட்டு என்னில் கை வையுங்கள்‘ என யுவதி தெரிவித்தாராம். இதனையடுத்து யுவதியை அங்கு நின்றவர்கள் சமாளித்து மண்டப அறை ஒன்றினுள் வி்ட்டுவிட்டு கலியாண வீட்டுக்கு வந்தவர்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்துள்ளனர்.

அத்துடன் யுவதியையும் சம்பவத்தையும் புகைப்படம் எடுத்தவர்களையும் மாப்பிளை வீட்டார் தடுத்து நிறுத்தி கெஞ்சி மன்றாடி புகைப்படங்களை அழிக்க வைத்ததாகவும் தெரியவருகின்றது,

யுவதி எதற்காக மாப்பிளையைத் தாக்கினார் அறியப்படவில்லை. மாப்பிளை என்.ஜி.ஓ ஒன்றில் அதிகாரியாகக் கடமையாற்றுபவர் என்றும் மணப் பெண் ஆரம்பபாடசாலை ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply