தனது 10 மாத குழந்தை மற்றும் 7 வயது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த தாயை (33) மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.
கண்டி – கொழும்பு அதிவேக ரயிலில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கையிலேயே குறித்த தாய் மற்றம் குழந்தைகள் காப்பற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸ் உப பரிசோதகர் கே.ஏ.ஆர். ஹேவகே, பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளார்.
உறவினர்கள், தனக்கு கொடுமை செய்து துன்புறுத்துவதாலேயே தான் இம்முடிவுக்கு வந்ததாக அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண்ணை, ரூபா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டதோடு, எதிர்வரும் பெப்ரவரி 29 ஆம் திகதி, அவரது மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் குறித்த தினத்தில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு தெரிவித்த நீதவான் பிள்ளைகளின் நன்னடத்தை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தாய் ஒருவரால் தனது 6 வயது மகன் ரயிலில் தள்ளிவிட முயன்ற சந்தர்ப்பத்தில் கர்ப்பிணி பெண் பொலிஸார் ஒருவரால் காப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply