அயர்லாந்தில் முற்றிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரு யுவதிகள், தாம் உறவினர்களா என்பதை கண்டறிவதற்காக மரபணு பரிசோதனை நடத்தியுள்ளனர். எனினும் இவர்கள் எவ்வகையிலும் உறவினர்கள் அல்லர் எனத் தெரியவந்துள்ளது.
நியாம் கியேனி, இரேன் அடம்ஸ் ஆகிய இவ்விரு யுவதிகளும் இரட்டைப் பிறவிகள் போன்று ஆச்சரியமளிக்கும் வகையில் ஒரே தோற்றத்துடன் காணப்படுகின்றனர். ஆனால், இவர்கள் இரட்டையர்களோ, சகோதரிகளோ அல்லர்.
அதையடுத்து, தமது குடும்பங்கள் ஏதேனும் வழியில் உறவினர்களாக இருக்கலாம் எனக் கருதிய இவ்விருவரும் மரபணு பரிசோதனைகளையும் நடத்தத் தீர்மானித்தனர்.
ஆனால், இவர்களின் குடும்பத்தினருக்கு இடையிலும் உயிரியல் ரீதியான எவ்வித உறவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை, நியாம் கியேனியின் மூதாதையினர் 20,000 வருடங்களுக்கு முன் தென்மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் எனவும், இரேன் அடம்ஸின் குடும்பத்தினர் 20,000 வருடங்களுக்கு முன் மொசபத்தேமியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாம்.
எமது குடும்பங்கள் 2 இலட்சம் வருடங்களுக்கு முன்னராவது தொடர்புபட்டிருந்திருக்கலாம் என நான் கருதினேன் என்கிறார் 27 வயதான நியாம்.