அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார்.

ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார்.

14398_14398Untitled-2இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸி சாரதியை அடித்தும் காலால் எட்டி உதைத்தும் மோதலில் ஈடுபட்டு ள்ளார்.

அத்துடன் டாக்டர் அஞ்சலியின் ஆத்திரம் அடங்கவில்லை. அந்த டெக்ஸியில் அமர்ந்துகொண்ட அஞ்சலி, அதன் உள்ளிருந்த பணம், பத்திரங்கள், சாரதியின் தொலைபேசி ஆகியவற்றை வீதியில் வீசி எறிந்துள்ளார்.

பின்னர் மியாமி நகர பொலிஸார் அங்கு வந்து டாக்டர் அஞ்சலியை அழைத்துச் சென்றனர்.

இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்படி பெண், டாக்டர் அஞ்சலி ராம்கிசூன் என இனங்காணப்பட்டார். 30 வயதான இவர், புளோரிடா மாநிலத்திலுள்ள ஜெக்ஸன் ஹெல்த் சிஸ்டம் எனும் நிறுவனத்தின் வைத்தியசாலையில் பணியாற்றுபவர் என்பதும் தெரியவந்தது.

14398Drஇதையடுத்து டாக்டர் அஞ்சலியை இடைநீக்கம் செய்துள்ள ஜேக்ஸன் ஹெல்த் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாகம், அவர் மீது உள்ளக விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் பெறுபேறு அடிப்படையில் அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி டெக்ஸியின் சாரதி பொலிஸாரை அழைப்பதற்காக தொலைபேசியை எடுத்தபோது, டாக்டர் அஞ்சலி ராம்கிசூன், ஆத்திரமடைந்து காரின் சாவியை பறித்துக்கொண்டு அப்பால் சென்றார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலியின் தாக்குதலால் தனக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தொலைபேசியில் சாரதி கூறிபோது, அதை மறுதலிக்கும் விதமாக அஞ்சலி பேசிக்கொண்டிருந்தாராம்.

‘நான் 5 அடி உயரமான பெண். 100 இறாத்தல் (45 கிலோ) எடையையே கொண்டுள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தாராம்.

Share.
Leave A Reply