பிரித்தானிய நாட்டில் கற்பழிப்பு வழக்கில் விடுதலையான நபர் ஒருவர் எதிர்காலத்தில் எந்த பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டாலும், அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Yorkshire நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 40 வயதான நபர் மீது கடந்த 2015ம் ஆண்டு கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
எனினும், கற்பழிப்பிற்கு உள்ளான பெண்ணின் சம்மத்தின் அடிப்படையில் அந்த நபரை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதே சமயம், குறிப்பிட்ட அந்த நபரால் மற்ற பெண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக Yorkshire நகர பொலிசார் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதிகள் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அதிரடி தீர்ப்பை அளித்துள்ளனர்.
அதாவது, விடுதலை செய்யப்படும் அந்த நபர் வெளியில் சென்று கைப்பேசி மூலமாக இணையத்தளைத்தை பயன்படுத்தினாலும் அல்லது, கைப்பேசி வழியாக பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் அல்லது அவர்களை அழைக்க முயற்சித்தாலும், அதற்கு முன்னதாக பொலிசாருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
இந்த தீர்ப்பின் உச்சக்கட்டமாக, எதிர்வரும் மே மாதம் வரை விடுதலை ஆகும் நபர் எந்த பெண்ணிடமும் உடலுறவு கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக, அந்த பெண்ணின் பெயர், முகவரி, அவரது பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்களை பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகள் விடுத்துள்ள இந்த தீர்ப்பை அந்த நபர் மீறினால், அவருக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், Yorkshire நகர பொலிசார் மேலும் ஒரு கோரிக்கையை நீதிபதிகள் முன்னிலையில் வைத்துள்ளனர்.
அதாவது, இந்த தீர்ப்பானது எதிர்வரும் மே மாதத்தில் முடிந்து விடாமல், அடுத்த 2 வருங்களுக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் இந்த விதிமுறைகளை அந்த நபர் பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.
தற்போது நபரை விடுதலை செய்துள்ள நீதிமன்றம், பொலிசாரின் இந்த புதிய கோரிக்கையை பரிசீலனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.