திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் 07 ம் வட்டாரத்தில் கட்டப்படாதிருந்த கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இன்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

ecffad0d-a054-434d-9a4b-68c1f3cf8470சம்பூர் 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 வயதான சிறுவனொருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாடச் சென்ற சிறுவன் மாலை 5.30 மணியாகியும் வீடு திரும்பாமையால் சிறுவனின் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பின் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவனை தேடிய போது சிறுவன் இறந்த நிலையில் கட்டப்படாத கிணறு ஒன்றுக்குள் கிடந்துள்ளான்.

இதனால் இச் சிறுவன் கிணற்றுக்குள் இடறி வீழ்ந்துள்ளான் என்றே பலரும் கருதினர்.

56b99f48-0df3-466b-8991-1f312e567b01ஆனால் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லா, இன்று அதிகாலை 12.10 அளவில் சுழி ஓடத் தெரிந்த ஒருவரை இறங்கி சடலத்தை எடுக்குமாறு கேட்டதிற்கிணங்க இளைஞன் ஒருவன் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்து வெளியில் கொண்டு வந்த போது எல்லோருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆனால் சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு பலரும் பேரதிர்ச்சியடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிர் இழந்த அப் பாலகன் கொலை செய்யப்பட்டு வயிற்றில் கல் கட்டப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா அல்லது கல் கட்டப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா என்பது தெரியவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9d4e8c17-3fa7-428e-b783-7c424e5727f22ac0c628-baa5-4676-91c4-72c89b30161204f46c5f-7733-4354-892d-0b3e63629f39

Share.
Leave A Reply