யாழ்ப்பாணம்: சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே.. உலக் தமிழர்களால் மறக்க முடியாத பாடல் இது. அக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் கூட பிரபலமான பாடல் இது.

இப்பாடலை எழுதியவரான எம்.எஸ். கமலநாதன் நேற்று மரணமடைந்தார். 70களில் மிகப் பிரபலமான இலங்கைத் தமிழ்ப் பாடல் இது. இலங்கையிலிருந்து உலகத் தமிழர்களின் இதயங்களையும் தொட்டுத் தழுவிய துள்ளல் பாடல்.

இலங்கை வானொலியில் தினசரி தவறாமல் ஒலிபரப்பாகும் இப்பாடலை எழுதி இசையமைத்தவர் கமலநாதன். இப்பாடலைப் பாடியவர் நித்தி கனகரத்தினம்.

ஈழத்தின் வதிரியூரில் பிறந்தவரான கமலநாதன் கால்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். அதில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இசை ஆர்வம் மிக்க இவர் ராகங்கள் குறித்த ஞானமும் கொண்டவர் ஆவார்.

தனது 77வது வயதில் நேற்று வதிரியூரில் மரணமடைந்தார் கமலநாதன். கமலநாதன் குறித்த குறிப்புகளை அறிய.. அவரது வார்த்தைகளிலேயே.. இங்கு சென்று பார்க்கலாம்

Share.
Leave A Reply