பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன்.

அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ‘ தொந்தரவு கொடுத்தார். மேலும் மிரட்டலும் விடுத்தார். என்னை பணியில் இருந்தும் நீக்கினார் என தெரிவித்திருந்தார்.

இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிக்ரம் சௌத்ரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. மேலும் அவருக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணி மீனாட்சிக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டது. யோகா குரு பிக்ரம் மீது மேலும் 5 பெண்கள் இது போன்ற முறைப்பாடுகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply