வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அந்த குடியிருப்பின் 14 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரான மாணவனை கைது செய்ததாகவும் பின்னர் அவரை கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,
குறித்த பெண் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள குறித்த வாடகை வீட்டில் தங்கியிருந்த போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த மாணவன் தனது உடலை மசாஜ் செய்யுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளான். எனினும் அதனை அந்த பெண் நிராகரித் துள்ளார்.
அதனால் கோபமடைந்த மாண வன் தன்னை தாக்கியதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணை வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கல்கிஸை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.