தென் ஆபிரிக்க உதுகேலா நகரில் கன்னித்தன்மையுடன் இருக்கும் கல்லூரி மாணவிகளுக்கு விசேட புலமைப்புரில்களை அந் நகரின் மேயர் வழங்கியுள்ளார்.
தென் ஆபிரிக்காவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள குவாஸ{லா மாகாணத்தின் மேயரே இப் புலமைப் பரிசிலை வழங்க முன்வந்துள்ளார்.
மாணவிகள் தூய்மையாக இருப்பதுடன் கல்வியில் கவனத்தை குவிக்கச் செய்வதை ஊக்குவிப்பதற்காக இத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது என மேயர் அலுவலகத்தின் பேச்சாளரான ஜபுலானி எம்கோன்ஸா தெரிவித்துள்ளார்.
இப் புலமைப் பரிசிலை பெற விரும்பும் மாணவிகள் கல்வியை பூர்த்திசெய்யும் வரை கன்னித் தன்மையாக இருப்பதற்கு இணங்குவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு இணங்கவும் வேண்டும்.
முதல் கட்டமாக 16 மாணவிகளுக்கு இப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்பட்ட உயர்தரப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு இப் புலமைப் பரிசில் வழங்கப்படும் என எம்கோன்ஸா தெரிவித்துள்ளார்.
நகர மேயரான மஸிபுகோ அம்மையார் இது தொடர்பாக கூறுகையில், “எம்மைப் பொறுத்தவரை, நீங்கள் பட்டதாரியாகும் வரை அல்லது சான்றிதழை பெறும் வரை எதிர்வரும் 3 வருடகாலம் நீங்கள் நீங்களாகவே இருந்து கல்வியில் கவனம் செலுத்துவதற்கு நன்றி கூறுவதாகும்.
இளம்வயது கர்ப்பங்களையும் பாலியல் நோய்களின் பரவலையும் இத் திட்டம் கட்டுப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.