துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டு விழா மேடையில், சோ முன்னிலையில் பல கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது.

அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது. ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ எனப் பேசி அதிரவைத்தார் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையா.

ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது ஆச்சர்யம்.  பழ.கருப்பையாவைச் சந்திக்கப்போனால், அதைவிடப் பல மடங்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தருகிறார்…

“திடீரென உங்கள் கட்சியையே விமர்சனம்செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அதுவும் இவ்வளவு கடுமையான விமர்சனம். கட்சித் தலைமையில் இருந்து ஏதேனும் விளக்கம் கேட்டார்களா?”

அ.தி.மு.க-வைப் பற்றி உங்களது மதிப்பீடு என்ன?”

நான்கரை ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்து நீங்கள் செய்தது என்ன?”

விமர்சனங்களை, நீங்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்களா… அல்லது ஏதோ ஒருவிதத்தில் தலைமைக்குத் தெரியப்படுத்தி இருக்கிறீர்களா?” என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்த பழ. கருப்பையாவின் எக்ஸ்க்ளுசிவ் வீடியோ பேட்டி இதோ…

Share.
Leave A Reply