அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பிரதேசத்தில் (களியோடைப் பாலத்தினை அண்டிய பகுதியில்) இன்று (28) அதிகாலை 3.30 மணியளவில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
12644779_1670225806598603_8500574242910233943_n
பொத்துவில் இருந்து இறால் ஏற்றி வந்த நிந்தவூரைச் சேர்ந்த ஆர்.எம். றிஸ்வான் என்பவருக்குச் சொந்தமான சிறிய ரக லொறியொன்று குறித்த பகுதியால் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளை மாடொன்று குறுக்கே வந்ததால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அருகிலிருந்த வயல் பகுதியினுள் சென்று தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

12654222_1670225823265268_2564676939752220727_n
தெய்வாதீனமாக வாகனத்தில் பயணம் செய்த சாரதியும், அதன் உதவியாளரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply