தேயிலை தூள் கொண்டு செல்வது போன்று முச்சக்கர வண்டியில் குழந்தையின் சடலம் ஒன்றை கொண்டு சென்ற தந்தை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.

குழந்தையின் சடலத்தை அட்டை பெட்டி ஒன்றில் வைத்து எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

புஸ்ஸல்லாவை – டெல்டா பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர், தனது குழந்தை சுனயீனம் காரணமாக பன்விலதென்ன மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார். பின்னர் குழந்தை கம்பளை மருத்துவ மனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் குழந்தை உயிரிழந்ததுடன், சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவ மனை அனுமதித்துள்ளது.

எனினும் மலர் சாலைக்கு இதனை அறிவித்து விட்டு சடலத்தை வீட்டுக்கு எடுத்த செல்வேண்டிய நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக பின்னர் தந்தை பணம் இல்லை என கூறியுள்ளார்.

பின்னர் சடலத்தை முச்சக்கர வண்டியில் வைத்து வீட்டுக்கு கொண்டு செல்ல தந்தை தீர்மானித்துள்ளார்.

எனினும் முச்சக்கர வண்டி சாரதிக்கு தெரியாமல் சடலத்தை அட்டை பெட்டி ஒன்றில் வைத்து, தேயிலை தூள் கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

பின்னர் முச்சக்கர சாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டு அட்டை பெட்டியில் சடலம் இருப்பதை அறிந்துவிட்டார்.

பின்னர் கோபத்திற்கு உள்ளான சாரதி குறித்த தந்தையுடன் முரண்பட்டுள்ளார்.

பின்னரே இது தொடர்பான விடயங்கள் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply