திருவனந்தபுரம்: என் அக்கா கல்பனாவுக்கு வந்த பல வாய்ப்புகளை நான் தான் பயன்படுத்தி நடித்தேன். அப்படி இருந்தும் அவர் என் மீது கோபப்படாமல், சந்தோஷப்பட்டவர் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா ஹைதராபாத் சென்ற இடத்தில் திடீர் என்று மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.
கல்பனாவின் மரணம் திரையுலகிற்கு பெரும் இழப்பு என்று பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கல்பனா பற்றி ஊர்வசி கூறுகையில்,27-1453888966-1

பட வாய்ப்பு
என் அக்காவுக்கு வந்த பல பட வாய்ப்புகளில் நான் தான் நடித்தேன். அவருக்கு வந்த வாய்ப்பை நான் பயன்படுத்தியதை நினைத்து அவர் என் மீது கோபப்பட்டதே இல்லை. மாறாக என் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார்.
27-1453888972-2

முந்தானை முடிச்சு
எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க என் அக்கா கல்பனா தான் ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்புக்கு அவருடன் நான் சென்றபோது பாக்யராஜ் என்னை பார்த்துவிட்டு என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தார்.

27-1453888978-3

பாசம்
தனக்கு வந்த வாய்ப்புகளில் பெரும்பாலானவற்றை எனக்கு அளித்து மகிழ்ந்தவர் கல்பனா. என் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் என்றார் ஊர்வசி.27-1453888984-4

பிறந்தநாள்
கல்பனா கடந்த 25ம் தேதி இறந்தார். ஜனவரி 25ம் தேதி தான் ஊர்வசியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply