திருப்பமான மோதல்:  1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக்கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.

அதுவரை எங்காவது ஒரு பகுதியில் நடைபெறும் மோதலோடு பூர்த்தியான இயக்க மோதல்கள் முதன் முதலாக முழு மோதலாக வெடித்தது அப்போது தான்.

புலிகள் இயக்கத்தின் கோப்பாய் பகுதி பொறுப்பாளர் லிங்கம். அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். தமது இயக்க சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த லிங்கத்தோடு ரெலோ இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

பிரச்சனை முற்றியதால் ரெலோ உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் லிங்கத்தை தமது வாகனத்தில் கடத்திச் சென்றார்கள்.

சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார் லிங்கம். அங்குவைத்து லிஙகத்தை விசாரிக்க முற்பட்டனர் ரெலோ இயக்கத்தினர்.

லிங்கம் ஒத்துழைக்கவில்லை. அதேநேரம் லிங்கம் கடத்திச் செல்லப்பட்ட விடயத்தை அறிந்த புலிகள் ரெலோவோடு தொடர்பு கொண்டனர்.

லிங்கம் தப்பியோட முற்பட்டபோது நம்மவர்கள் சுடவேண்டியேற்பட்டது. அதனால் லிங்கம் இறந்துவிட்டார். என்று பதில் சொல்லப்பட்டது.

உடனடியாக செயலில் இறங்கினார்கள் புலிகள். ரெலோ இயக்க முகாம் ஒன்றுக்குள் புகுந்து பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஒரு குழுவை அனுப்பி வைத்தார் கிட்டு.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவீதியில் ரெலோ முகாம் ஒன்று இருந்தது. ஏனைய முகாம்களைவிட அதனைத் தாக்குவதுதான் சுலபமாக இருக்கும் என்று கிட்டு திட்டம் போட்டார்.

ரெலோ முகாம் ஒன்றை தாக்கிவிட்டு பின்னர் ரெலோவோடு பேச்சுக்குச் செல்லலாம் என்பதுதான் கிட்டுவின் திட்டம்.

தாக்குதல் ஆரம்பம்

திட்டப்படி பழைய பூங்காவீதி முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ரெலோ உறுப்பினர்கள் பதிலடியில் ஈடுபடவில்லை. அதற்கு தயாராகவும் இருக்கவில்லை.

லிங்கம் கடத்தப்பட்ட விவகாரமும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியாது.

முகாமிலிருந்த சிலர் கொல்லப்பட்டனர். முகாம் பொறுப்பாளர் உட்பட பலர் தப்பிச் சென்றனர்.

அந்த முகாமின் பொறுப்பாளரது மருமகன் ஒருவர் புலிகளிடம் சிக்கிவிட்டார். அவரது வயது 13. முதல்நாள்தான் மட்டக்களப்பிலிருந்து இருந்து தனது மாமனாரைக் காண வந்திருந்தார்.

அவரையும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் என்று நினைத்துவிட்டார்கள் புலிகள். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்றான் சிறுவன். நம்பவில்லை.

வேன் ஒன்றுக்குள் போட்டு பூட்டி வெடி குண்டை வைத்தனர் புலிகள். வேன் சிதறியது. சிறுவனின் காலில் ஒரு பகுதி மரத்தில் போய் தொங்கியது.

பழைய பூங்காவீதி முகாமில் பதிலடி இருக்கவில்லை என்பதால் கிட்டு திட்டத்தை மாற்றிக் கொண்டார்.

ரெலோ முகாம்கள் அனைத்தையும் தாக்குமாறு சகல முகாம்களுக்கும் ‘வோக்கி’யில் உத்தரவு பிறப்பித்தார்.

திலீபன் தலைமையில் கல்வியங்காடு ரெலோ முகாம் நோக்கியும் ஒரு அணி சென்றது.

இந்தக் காலகட்டத்திலேயே புலிகள் தொலைத்தொடர்பு சாதன விடயத்தில் முன்னணியில் இருந்தனர். அநேகமாக சகல முகாம்களிலும் வோக்கிடோக்கி இருந்தது.

அதனால் உத்தரவுகளையும், உடனடித் தகவல்களையும் விரைவாகப் பரிமாற முடிந்தது.

ஏனைய இயக்கங்களிடம் தலைமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வோக்கிடோக்கி இருந்தது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவந்துதான் கல்வியங்காடு ரெலோ முகாமுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது.

அதற்கிடையே கல்வியங்காட்டுப் பகுதியில் புலிகளது வியூகம் வகுக்கப்பட்டு விட்டது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை முதலிலேயே அறிந்திருந்தால் கல்வியங்காட்டில் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் முந்திக்கொண்டு பதிலடிக்கு தயாராகியிருப்பார்கள்.

ரெலோவின் பிரதான முகாமுக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய ரெலோ முகாம்களுக்கும் இடையே வானொலித் தொடர்பு இருந்திருந்தால் பிரதான முகாமை நோக்கி அவர்கள் அழைத்திருக்கலாம்.

வானொலி தொடர்பு சாதனங்களின் பெறுமதியை அன்றுதான் ரெலோ உணர்ந்திருக்கும். முதலிலேயே உணர்ந்திருந்தால் ரெலோவாலும் வாங்க முடிந்திருக்கும்.

pulikalllடயரில் பேட்டடார்கள்.

தமது முகாம்கள் தாக்கப்படும் விடயமே தெரியாமல் வீதிவழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

ரெலோ வாகனம் ஒன்றை மறித்த புலிகள் “நீங்கள் எந்த இயக்கம்?” என்று கேட்டார்கள். புலிகள் தமது இயக்கத்திற்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.

“நாங்கள் ரெலோ…நீங்கள்?”

புலிகள் பதிலே சொல்லவில்லை.

கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளினார்கள். வேனில் இருந்தவர்கள் ஆறுபேரும் கொல்லப்பட்டார்கள்.

திருநெல்வேலிச் சந்தியில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

கல்வியங்காடு பிரதான முகாமில் இருந்து மட்டும் ரெலோ பதில் தாக்குதலில் ஈடுபட்டது.  அதனால் பிரதான முகாமை புலிகள் நெருங்கிச் செல்ல முடியவில்லை.

பிரதான முகாமுக்கு வெளியிலிருந்து ஆட்பலம் வந்து சேராமல் புலிகள் வியூகம் அமைத்துக் கொண்டனர்.

அதேவேளை திருநெல்வேலிச் சந்தியில் சூடுபட்டு விழுந்து கிடந்த ரெலோ உறுப்பினர்களது உடல்களை ஒன்று சேர்த்தனர்.

சகல உறுப்பினர்களது உடல்களையும் ஒரே இடத்தில் குவித்து, அவற்றின்மீது டயர்களை போட்டு கொளுத்தினார்கள். கிட்டு, திலீபன் ஆகியோரது உத்தரவுப்படியே உடல்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன.

சொக்கப்பானை எரிவது போல திருநெல்வேலி சந்தியில் தீயெழுந்து அப்பகுதியை சுடுகாடு போல மாற்றியிருந்தது.

தமது ஜீன்ஸ்களை முழங்கால்வரை மடித்துவிட்டுக்கொண்டு எரியும் நெருப்பில் உடல்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.

திசை தெரியவில்லை

கல்வியங்காடு பிரதான முகாமைத்தவிர யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ரெலோ முகாம்களும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாளே வீழ்ச்சியடைந்தன.

ரெலோ உறுப்பினர்களில் முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்பேர்.

புலிகளால் ரெலோ முகாம்கள் தாக்கப்பட்டபோது தப்பியோடிய அவர்களுக்கு பாதைகள் தெரியவில்லை. யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது என்றும் விளங்கவில்லை. புலிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.

முதல் நாளன்று அப்படி மாட்டியவர்களில் கிட்டத்தட்ட நூறுபேர் வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர்.

திருநெல்வேலி சந்தி தவிர இரு பாலைச் சந்திக்கு அருகாமையிலும் டயர்களில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன.

ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் பலர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திடமும், ஈரோசிடமும் சென்று பாதுகாப்புக் கேட்டனர்.

கிட்டத்தட்ட நூறு ரெலோ உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களிலும், 50ற்கு மேற்பட்டவர்கள் ஈரோஸ் இயக்க முகாம்களிலும் முதல் நாளன்று அடைக்கலம் பெற்றனர்.

ரெலோ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்று கிட்டு நேரில் சென்று டக்ளஸ் தேவானற்தாவிடம் கூறினார்.

புலிகள் விதித்த தடை
பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் கசப்புகள் ஏற்படலாம் என்றார் கிட்டு.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ உறுப்பினர்களுக்கு தொடர்ந்து புகலிடம் வழங்கியது. வெள்ளைக் கொடிகளை வீதிகளில் பறக்கவிட்டு சமாதானத்தை வலியுறுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் நாவந்துறையில் இருந்த ரெலோ முகாமை தாக்குவதற்காகச் சென்ற புலிகள் இயக்கத்தினரை பொதுமக்கள் தடுத்தனர்.

பொதுமக்களுக்கும், புலிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் புலிகள். பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த மக்கள் புலிகள் சென்ற வாகனங்களில் இரண்டை கொளுத்தினார்கள்.

திரும்பிச்சென்ற புலிகள் மீண்டும் வந்து வாகனத்தைக் கொளுத்தியவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.

இறந்தவர்களது உயிர்களை உங்களால் திருப்பித்தரமுடியுமா? என்று கேட்டனர் கூடியிருந்த மக்கள்.

பிரச்சனையை வளர்க்காமல் புலிகளது அணி திரும்பிச் சென்றது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு அறிவித்தல் செய்யப்பட்டது.

ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று, “ரெலோ இயக்க உறுப்பினர்கள் எம்மிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். ரெலோ இயக்கத்தினருக்கு புகலிடம் வழங்குவோர் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்.

இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம்.” என்று அறிவித்தார்கள் புலிகள்.

ஈ.ழப் போராட்ட வரலாற்றில் இயக்கமொன்றை பிறிதொரு இயக்கம் தடைசெய்துவிட்டதாக அறிவித்தது அதுதான் முதல் தடவை.

(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்

pulikall
எம்.ஐ.17 எங்கே வீழ்ந்தது? கிளம்பிய வதந்திகளும், கிடைத்துள்ள தகவல்களும்

எம்.ஐ.17 சிறப்புத்தகுதிகள்

• சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோதே தயாரான தரமான உற்பத்தி
• 24 இருக்கைகள் உள்ளன.

• 12 தற்காலிக படுக்கைகளை ஏற்படுத்தி நோயாளர்களை காவிச் செல்ல முடியும். மருத்துவ சாதனங்களையும் பொருத்தலாம்.

• வசதிக்கு ஏற்ப மாற்றக்கூடிய கதவுகள்.

•மீட்புப் பணிகளுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

•ஒரு முறை எரிபொருள் போட்டு விட்டால் 800கி.மீட்டர் தூரம் வரை தாக்குப்பிடிக்கும். பூரண சுமையோடு என்றால் 550கி.மீட்டர்.

•மேலதிக எரிபொருள் தேவைக்கு ஓரிரு பெற்றோல் தாங்கிகளையும் எடுத்துச் செல்லும் வசதி இருக்கிறது.

எம்.ஐ. ஹெலிகொப்டர் எங்கே? சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது சிறு சேதத்துடன் புலிகளால் தரையிறக்கப்பட்டதா?

கொழும்பு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் தலைநகர ஆங்கில, சிங்கள பத்திரிகைகளில் பரபரப்பான கேள்வி அதுதான்.
இதற்கிடையே ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்களில் சிலரது உடல் பகுதிகள் கரையொதுங்கி உள்ளன.

மொத்தம 39 பேர் பயணம் செய்தனர். கரையொதுங்கிய உடல்பகுதிகள் சிலரதுதான். மீதிப் பேர் என்ன ஆனார்கள்? அது அடுத்த கேள்வி.

ஹெலிகொப்டர் எப்படித் தாக்கப்பட்டது என்பதற்கான விடையில் மேற் கண்ட கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.

கடந்த ஆண்டு பலாலி விமானத்தளம் அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது புக்காரா விமானம் ஒன்று புலிகளால் வீழ்த்தப்பட்டது.

மூன்று விமானங்களுமே விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப்பட்டிருந்தன. அதனால் மூன்று விமானங்களும் வானிலேயே வெடித்துச் சிதறியிருந்தன.

கடந்த வருட இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் வை. 8 ரக விமானம் ஒன்றும் புலிகளால் தாக்கப்பட்டது.

பலாலி கூட்டுப்படை தளம் அருகே கடற்பரப்பின்மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தபோதே வை. 8 தாக்கப்பட்டது. தாக்கப்பட்ட வை. 7 கடலில் வீழ்ந்தது. இருவர் உயிர்தப்பவும் முடிந்தது.

அதற்கு என்ன காரணம்? வை. 8 தாக்கப்பட்டது ஏவுகணையால் அல்ல. ஒலிகன் ரக பீரங்கியால்தான் சுடப்பட்டது.

ஏவுகணை என்றால் விமானத்தில் பட்டதும் வெடித்து, விமானத்தையும் வெடித்துச் சிதறவைத்துவிடும். உள்ளேயிருப்பவர்கள் தப்பமுடியாது.
விமானதளத்தில் தரையிங்க தாழ்வாகப் பறந்ததால்தான் ஒலிகன் ரக பீரங்கியால் குறி தப்பாமல் சுட முடிந்தது. தாழ்வாகப் பறந்த நிலையில் கடலில் விழுந்தமையால் இருவர் தப்பிக் கொண்டார்கள்.

ஆனால் எம்.ஐ.17 விவகாரம் வேறு மாதிரியானது.

பலாலியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடை நடுவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஹெலி தாக்கப்பட்டதையோ, வெடித்து சிதறியதையோ வெற்றிலைக்கேணி முகாமிலிருந்தவர்கள் காணமுடியாத தூரத்தில் வைத்துத்தான் தாக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தரையிறங்கும் நோக்கோடு எம்.ஐ.17 தாழ்வாகப் பறந்திருக்க முடியாது. உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதுதான் குறிவைக்கப்பட்டிருக்கின்றது.

உயரத்தில் பறந்து சென்று கொண்டிருக்கும் ஹெலியையோ, விமானத்தையோ ஏவுகணையால் தாக்குவதுதான் சுலபம்.
ஒலிகன் ரக பீரங்கியால் சுட்டால் குறிதவறலாம்.

அப்படி குறி தவறும் போது ஹெலியில் உள்ளவர்கள் கவனித்துவிட்டால் மற்றொரு தாக்குதலுக்கு வசதியில்லாமல் போய்விடும்.
ஏவுகணையென்றால் இலக்கு தவறினாலும் தனது ரகத்திற்கு ஏற்ப வெப்பத்தையோ, அல்லது உலோகத்தையோ மோப்பம்பிடித்து சென்று தாக்கிவிடும்.

புலிகளது நோக்கம் ஆனையிறவு, மற்றும் வெற்றிலைக்கேணி முகாம்களில் படையினர் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தாமல் தடுப்பதுதான்.

வடக்கில் அடுத்த கட்ட பாரிய நடவடிக்கைக்கு ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் முக்கிய பங்காற்றும். எனவே அதறடகு விநியோக பாதையில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுதான் நோக்கம்.

எனவே கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல், பயன்படுத்தவே புலிகள் நினைத்திருப்பர். அதனால் ஏவுகணைத் தாக்குதலையே மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நூற்றுக்கு 95 வீதம் நம்பத்தகுந்தது.

மீதி 5 வீதம் தான் ஒலிகன் ரக பீரங்கி தாக்குதலுக்கான சாத்தியம் இருக்கலாம்.

ஒலிகன் ரக பீரங்கியால் தாக்கி இருந்தால்கூட ஹெலி உயரத்தில் பறந்த நிலையில் சூடுபட்டு வெடித்திருக்கும்.

கரையொதுங்கியுள்ள உடல்பாகங்கள் சிதைந்துள்ளன. வெடித்து சிதறியதற்கான நம்பகரமான ஆதாரம் அதுதான்.

வெடிக்காமல் கடலில் விழுந்திருந்தால் சில உடல்களாவது முழு உடல்களாகவே கரையொதுங்கியிருக்கும். எனவே எம்.ஐ.17 வானில் வெடித்து கடலில் பாகங்களாக விழுந்தது மட்டும் நூறுவித உறுதி.

எம்.ஐ.17 எங்கே வைத்து தாக்கப்பட்டது? முரசுக்கு கிடைத்த தகவலின் படி பருத்தித்துறை முனையருகே வைத்துத் தான் புலிகள் தாக்கியிருக்கிறார்கள்.

ஹெலியின் பாகங்களும் அந்தக் கடற்பகுதியில்தான் விழுந்திருக்கின்றன. அதனை மக்கள் சிலரும் நேரடியாகக் கண்டிருக்கிறார்கள்.

ஆனால், படைத்தரப்பினருக்கு ஹெலி எங்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளானது என்பது சரியாகத் தெரியாது.

காரணம், பாதகாப்புக் காரணங்களுக்காக ஹெலி புறப்பட்ட பின்னர் அதற்கும் தரை முகாம்களுக்கும் இடையில் வானொலி தொலைத் தொடர்புகள் இருப்பதில்லை. தொடர்புகளை வைத்து புலிகள் தாக்கக்கூடும் என்பதால் அந்த ஏற்பாடு.

அதுதவிர கடலில் பரந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவும் கடற்கரும்புலிகளது அச்சுறுத்தல் அபாயம் ஒரு பிரதான தடை.

ஆக, எம்.ஐ.17 விவகாரம் முடிந்து போன கதைதான். புலிகளது விமானத்தாக்குதல் படடியலிலும், அரச தரப்பின் விமான இழப்பு பட்டியலிலும்தான் அந்த எம்.ஐ.17 பத்திரமாக இருந்து கொண்டிருக்கும்.

எம்.ஐ.17 இல் பயணம் செய்தவர்களில் சிலர் உயிரோடிருப்பதாக கூறப்படுவது அப்பட்டமான வதந்தி. நம்பாதீர்கள்.

முன்னைய தொடர்கள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-61

Share.
Leave A Reply