கள்ளக்குறிச்சி: விழுப்புரம் பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 3 மாணவிகளும் “திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என்று சரணடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் சடலமாக மிதந்தனர்.

இந்த 3 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தின் கட்டண கொள்ளையால் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாலேயே 3 பேரும் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் புகார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களின் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

medicalcase_002

இதில் கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி தாளாளர் வாசுகி, தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது வாசுகியை 3 நாட்கள் புழல் சிறையில் அடைக்கவும் 28-ந் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசுகி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட்டிடம் வாசுகி கூறியதாவது:

29-1454060061-vasuki34

பொங்கல் விடுமுறை 24ம் தேதிதான் முடிந்தது. ஆனால் 22-ந் தேதியே மாணவிகள் கல்லூரிக்கு வந்தது ஏன்? என எனக்கு தெரியவில்லை.
3 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது
3 மாணவிகள் எப்படி ஒன்றாக கைகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்ய முடியும்?
திட்டமிட்டே 3 மாணவிகளும் கொலை செய்யப்பட்டு எங்களையும் சிக்க வைத்துள்ளனர். எங்கள் கல்லூரியை இழுத்து மூட வைப்பேன் என்று ஒரு போலீஸ் அதிகாரி சபதமே போட்டார்.
இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர். ஆகையால் இவ்வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கடிதங்களும் வெளியான நிலையில் கல்லூரி தாளாளர் வாசுகியின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Share.
Leave A Reply