கனடா நாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக்கொண்டு இருந்த லொறி ஒன்றிலிருந்து கழன்று பறந்து வந்த சக்கரங்கள் பின்னால் வந்த காரை அப்பளம் போல் நொறுக்கியதில் அதில் பயணம் செய்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Vaughan என்ற நகருக்கு அருகில் 400 நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் Burlington என்ற நகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் பயணம் செய்துள்ளார். காரையும் அவரே ஓட்டிச்சென்றுள்ளார்.

நெடுஞ்சாலையில் பயணத்த அந்த காருக்கு சில மீற்றர்கள் முன்னால் மிக நீளமான லொறி ஒன்று அதிவேகத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது, முன்னால் சென்றுக்கொண்டு இருந்த லொறியின் பின்பக்கத்தில் உள்ள இரண்டு சக்கரங்கள் திடீரென கழன்று காற்றில் சூறாவளியாக சுற்றிக்கொண்டு வந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத காரின் ஓட்டுனர், காரை பக்கவாட்டில் திருப்புவதற்குள் அந்த சக்கரம் மிகச்சரியாக ஓட்டுனர் பகுதியை மிக மோசமாக தாக்கியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதை தொடர்ந்து, கார் ஓட்டுனரின் உடலும் காருடன் நசுங்கியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று அருகில் இருந்த கற்குவியலில் மோதி நின்றுள்ளது.

விபத்தை கண்ட நபர்கள் உடனடியாக காரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஓட்டுனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பேசிய Kerry Schmid என்ற பொலிஸ் அதிகாரி, ‘இந்த விபத்து கார் ஓட்டுனருக்கு துரதிஷ்டவசமானது. சக்கரங்கள் பறந்து வந்து கார் மீது மோதியதை அவர் எதிர்ப்பார்க்கவும் இல்லை, அதனை தவிர்க்கவும் முடியவில்லை.

கார் மீது மோதிய சக்கரத்தின் எடை 100 பவுண்டுகள் என்பதால், கார் ஓட்டுனரின் உடல் நசுங்கியுள்ளது.

மேலும், முன்னால் சென்ற லொறியின் சக்கரங்களை சரியாக பராமரிக்காத காரணத்தினால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது நிரூபனம் ஆனால், லொறி உரிமையாளருக்கு 50,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.

சாலையில் பயணிக்கும்போது சாலை விதிகளை நாம் ஒழுங்காக பின்பற்றினாலும் கூட, எதிரே செல்பவர்களால் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், வாகனத்தை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளார்.

canada_accident_003canada_accident_004canada_accident_005

Share.
Leave A Reply