ஆபிரிக்க நாடான எரித்ரியாவிலுள்ள ஆண்கள் குறைந்தபட்சம் இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவர் என வெளியான செய்தி குறித்து எரித்ரிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்சம் இரு மனைவிகளைக் கொண்டிருக்காவிட்டால் எரித்திரிய ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளரென  கென்ய  இணையத்தளமொன்றில் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியானது.

1998 முதல் 2000 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற எத்தியோப்பியாவுடனான யுத்தத்தில் எரித்ரிய ஆண்களில் பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டதால் ஆண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்

இதனால் பெண்களை திருமணம் செய்வதற்கு போதிய எண்ணிக்கையான ஆண்கள் இல்லாததால் எரித்ரிய அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதெனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 14522_53

 

 

கட்டாயமாக இரு பெண்களையேனும் திருமணம் செய்ய வேண்டுமென ஆண்களுக்கு கட்டளையிடப்பட்டது என்ற இந்த வியப்புக்குரிய செய்தி  பல நாடுகளிலுள்ள ஊடகங்களில் இடம்பிடித்தது. சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது.

ஆனால், மேற்படி செய்தி போலியானது என எரித்ரிய அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

(எரித்ரிய தலைநகரான) அஸ்மாராவிலுள்ள ஒரு முட்டாள் மனிதனுக்குக் கூட இச்செய்தியில் உண்மையில்லை என்பது தெரியும் என எரித்ரிய அதிகாரி ஒருவர் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply