இத்தாலி நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள தெய்வங்களின் சிலைகளை அதிகாரிகள் பெட்டிக்குள் மறைத்து வைத்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார முன்னேற்றம் காரணமாக ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹாசன் ருஹானி, அதில் ஒரு பகுதியாக இத்தாலி சென்றுள்ளார்.

அங்கு, இத்தாலிய பிரதமர் மாட்டியோ ரென்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார், இதில், இத்தாலிய நிறுவனங்களுடன், 1.25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சுற்றுப்பயணத்தின்போது, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் திட்டம், பிரான்ஸ் நாட்டுடன் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், ரெனால்ட் உள்ளிட்ட பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகியவற்றில் ஈரான் நாடு கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி, இத்தாலியில் உள்ள கேப்பிடோலின் என்ற அருங்காட்சியத்திற்கு பார்வையிட சென்றுள்ளார்.

italy_hidenaked_002அந்த அருங்காட்சியத்தில் விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள், சிலைகள் போன்றவை இடம்பெற்றிருந்தன, ஆனால் இத்தாலி நாட்டின் ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் நிர்வாண நிலையில் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளதால், அதனை பார்க்கும் விருந்தினர்கள் அதிருப்தி அடைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிர்வாண சிலைகள் அனைத்தையும் அருங்காட்சியக அதிகாரிகள் ஒரு பெட்டிக்குள் மறைந்து வைத்துள்ளனர்.

italy_hidenaked_003அதிகாரிகளின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அரசியல் காரணங்களுக்கான நாட்டின் கலாசாரத்தை விட்டுக்கொடுப்பது எந்த வகையிலும் சரியில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply